கோப்புப்படம்

 
இந்தியா

2025-ல் நாட்டின் ரத்த சேகரிப்பு 1.58 கோடி யூனிட்களாக உயர்வு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழு​வதும் ரத்த சேகரிப்பு அதி​கரித்து வருகிறது. ஆனாலும் ரத்த மேலாண்​மை​யில் பல்​வேறு சவால்​கள் உள்​ளன. இது தொடர்​பான மாநில வாரி​யான தரவு​கள் மாநிலங்களவை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அதில் கூறியிருப்​ப​தாவது:

சர்​வ​தேச அளவில் இந்​தி​யா​வும், சீனா​வும் அதி​கள​வில் ரத்த சேகரிப்பு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கின்​றன. கடந்த 2025-ம் ஆண்​டில் இந்​தியா 1.58 கோடி யூனிட் ரத்​த​மும், சீனா 2.5 கோடி யூனிட் ரத்​தத்​தை​யும் சேகரித்​துள்​ளன. எனினும், இந்​தி​யா​வில் கடந்த 2025-ல் 17.4 லட்​சத்​துக்​கும் அதி​க​மான ரத்​தக் கூறுகள் வீணடிக்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த 2023-ம் ஆண்​டில் இது 1.42 கோடி யூனிட்​களாக இருந்​தது. 2025-ல் உத்​தரப் பிரதேசம் அதி​கபட்​ச​மாக 21.6 லட்​சம் யூனிட் ரத்​தத்​தைச் சேகரித்​துள்​ளது. மகா​ராஷ்டிரா (18.73 லட்​சம்), குஜ​ராத் (11.82 லட்​சம்), ராஜஸ்​தான் (10.79 லட்​சம்), தமிழ்​நாடு (9.74 லட்​சம்) ஆகியவை அடுத்​தடுத்த இடங்​களில் உள்​ளன.

அதேசம​யம், ரத்​தக் கூறுகள் வீணாவ​தி​லும் உத்​தரப் பிரதேசம் முதலிடத்​தில் உள்​ளது. அங்கு 2.40 லட்​சம் ரத்​தக் கூறுகள் வீணாகி​யுள்​ளன. மகா​ராஷ்டி​ரா​வில் 1.87 லட்​சம், கேரளா​வில் 1.44 லட்​சம், ராஜஸ்​தானில் 1.21 லட்​சம், தமிழ்​நாட்​டில் 1.09 லட்​சம் ரத்​தக் கூறுகள் வீணாகி​யுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT