கோப்புப் படம்

 
இந்தியா

இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று ஆலோசனை: மம்தா, இடதுசாரிகள் தவிர பிற தலைவர்கள் வருகையை உறுதிப்படுத்தவில்லை

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: தலைமை தேர்​தல் ஆணை​யர்​கள் இடையே கருத்து வேறு​பாடு நில​வுவ​தாக தகவல் வெளி​யானது. இந்​நிலை​யில், இண்​டியா கூட்​ட​ணிக் கட்​சிகளின் ஆலோ​சனைக் கூட்​டம் இன்று நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில், தலைமை தேர்​தல் ஆணை​யருக்கு எதி​ராக பதவிநீக்க தீர்​மானம் கொண்​டு ​வரு​வது தொடர்​பாக ஆலோ​சிக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​வ​தாக மேற்கு வங்க முன்​னாள் முதல்​வரும் திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வரு​மான மம்தா பானர்ஜி மற்​றும் இடது​சாரி கட்​சித் தலை​வர்​கள் மட்​டுமே உறு​திப்​படுத்தி உள்​ளனர்.

மம்​தாவுடன் அவரது மரு​மக​னான அபிஷேக் பானர்​ஜி​யும் கலந்​து​கொள்​கிறார். இவர்​களு​டன் காங்​கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்​தி, ராகுல் காந்தி மற்​றும் மல்​லி​கார்​ஜுனா கார்​கே​வும் பங்​கேற்க உள்​ளனர்.

சமாஜ்​வாதி தலை​வர் அகிலேஷ், மாநிலங்​களவை தேர்​தலைக் காரணம் காட்​டி,இக்​கூட்​டத்​தில் பங்​கேற்​க​வில்லை எனக் கூறி விட்​டார். தனக்கு பதிலாக அடுத்​தகட்ட தலை​வர் யாரை​யா​வது அனுப்​புவ​தாகக் கூறி​யுள்​ளார். சிவசேனாவின் உத்​தவ் தாக்​கரே காணொலி மூலம் பங்​கேற்​ப​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

நேற்று மாலை வரை இண்​டியா கூட்​ட​ணி​யின் பல உறுப்​பினர்​கள் இக்​கூட்​டத்​தில் கலந்து கொள்​வதை உறு​திப்​படுத்​த​வில்​லை. இப்​பட்​டியலில், தேசி​ய​ வாத காங்​கிரஸ் (எஸ்​பி) சரத் பவார், ஆம் ஆத்​மி​யின் அர்​விந்த் கேஜ்ரி​வால், ஜார்​க்கண்ட் முக்தி மோர்ச்​சா​வின் ஹேமந்த் சோரண், ராஷ்டிரிய ஜனதா தளத்​தின் தேஜஸ்வி யாதவ் மற்​றும் தேசிய மாநாட்டு கட்​சி​யின் உமர் அப்​துல்லா ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர். தமிழ்​நாட்​டின் எதிர்க்​கட்​சி​யான திமுக​வுக்​கும் அழைப்பு விடுக்​கப்​பட்​டது. ஆனால், அக்​கட்சி சார்​பில் எவரும் கலந்​து​கொள்​கிறார்​களா என்​பதும் உறு​திப்​படுத்​தப்​பட​வில்​லை.

SCROLL FOR NEXT