இந்தியா

மேற்கு வங்க அரசின் நடவடிக்கையை தொடர்ந்து தாயகம் திரும்ப வங்கதேச எல்லையில் குவியும் சட்டவிரோத குடியேறிகள்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அரசு அமைந்த பிறகு, சட்டவிரோத குடியேறிகளுக்கு எதி​ராக தீவிர நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இவர்​களுக்கு தஞ்​சம் அளிக்​கவோ அல்​லது இவர்​களை நீதிமன்றத்தில் ஆஜர்​படுத்​தவோ கூடாது என்​றும், அதற்​குப் பதிலாக அவர்​களை நேரடி​யாக எல்​லை​யில் உள்ள பிஎஸ்​எப் வசம் ஒப்​படைக்க வேண்​டும் என்​றும் மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி அறி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்​கத்​தில் சட்​ட​விரோத குடியேறிகள் பெறும் நலத்​திட்ட உதவி​கள் கண்​டறியப்​பட்​டு, அவை நிறுத்​தப்​பட்டு வரு​வ​தாக​வும் பாஜக அரசு தெரி​வித்​துள்​ளது. மேற்கு வங்​கத்​தின் எல்லை மாவட்டங்​களில் சமீபத்​திய வாரங்​களில் சோதனை​களும் கண்​காணிப்​பும் தீவிரப்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இதற்​கிடை​யில், தடுப்பு முகாம்​கள் அல்​லது நாடு கடத்​தல் நடவடிக்​கைகளை தவிர்ப்பதற்காக, பலர் தாங்​களாகவே முன்​வந்து வங்​கதேசம் திரும்ப விரும்​புவ​தாக செய்​தி​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

நூற்​றுக்​கணக்​கான மக்​கள் வங்​கதேசம் நோக்​கிச் செல்​லும் செய்தி​களை குறிப்​பிட்டு மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா நேற்று முன்​தினம் பேசுகை​யில், “ஊடுரு​வல்​காரர்​கள் அவர்களாகவே திரும்​பிச் செல்​வ​தால் அரசு அவர்​கள் மீது எந்த சட்ட நடவடிக்​கை​யும் எடுக்​காது’’ என்​றார். இந்​நிலை​யில் சட்​ட​விரோத குடியேறிகள் பலர் இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வும் விதம் குறித்து ஊடகங்​களிடம் ஒப்​புக் கொண்​டுள்​ளனர்.

வங்​கதேசத்​தின் குஷ்டியா மாவட்​டத்​தைச் சேர்ந்த தச்​சர் ஒரு​வர் கூறுகை​யில், ‘‘இர​வில் பிஎஸ்​எப் வீரர்​களின் நடமாட்​டத்தை கண்​காணித்​து, ரோந்​துப் பணி​யில் இடைவெளி கிடைத்​த​போது எங்களை இடைத்​தரகர் ஒரு​வர் எல்​லை​யைக் கடக்க வைத்​தார். அவருக்கு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை கொடுத்​தோம்’’ என்​றார். ‘ஹல்​டியா லைவ்' என்ற உள்​ளூர் யூடியூப் சேனலிடம்' சட்​ட​விரோத வங்​கதேச குடியேறி ஒரு​வர் கூறுகை​யில், “நான் கேரளா​வில் வேலை செய்​தேன்.

இப்​போது வாடகைக்கு அறை எடுப்​ப​தற்கு கூட வாக்​காளர் அடையாள அட்டை மற்​றும் அரசு அடை​யாள ஆவணங்​களை கேட்கிறார்​கள், என்​னிடம் அந்த ஆவணங்​கள் இல்​லை. இடைத்​தரகர்​களிடம் 5 முதல் 6 பேர் கொண்ட குழுக்​கள் உள்​ளன. இவர்கள் இரவில் எந்​தெந்த பகு​தி​களில் பிஎஸ்​எப் நடமாட்​டம் இல்லை என்று பார்க்​கிறார்​கள்.

இடைவெளி கிடைக்​கும் தருணத்​தில், மக்​களை எல்​லை​யைக் கடக்க வைக்​கிறார்​கள். சில நேரங்​களில் எல்​லையை கடக்க இரவு முழு​வதும் காத்​திருக்க வேண்​டும். சில நேரங்​களில் 10 நிமிடங்​களில் அது நடந்​து​விடும்’’ என்​றார். வங்​கதேசத்​துட​னான இந்தியாவின் 4,096 கி.மீ. எல்​லை​யில் நதிப் பகு​தி​கள், விவ​சாய நிலங்​கள் மற்​றும் அடர்த்​தி​யான மக்​கள் தொகை கொண்ட பகுதிகள் உள்ளன.

இதில் கண்​காணிப்பு குறைந்த பகு​தி​களை பயன்​படுத்தி வங்கதேசத்​தினரை முகவர்​கள் இந்​தி​யா​வுக்​குள் அனுப்புகிறார்கள். இந்​தி​யா​வுக்​குள் நுழைந்த பிறகு, ஆவணங்களை ஏற்​பாடு செய்ய திரிண​மூல் காங்​கிரஸின் உள்ளூர் அரசி​யல்​வா​தி​கள் உதவியதாக வங்​கதேச பெண் ஒரு​வர் கூறி​னார். ஏபிபி நியூஸிடம் அப்​பெண் கூறுகை​யில், ‘‘மம்​தா​வின் கட்சி ஆட்​சி​யில் இருந்​த​போது வாக்​காளர் அட்​டை​யும் ரேஷன் அட்டை​யும் பெற்​றேன். கட்சி​யின் ஆட்​கள் எனக்கு ஆவணங்களைப் பெற உதவி​னார்​கள். லட்​சுமீர் பந்​தர் திட்​டத்​தின் பலன்​களை​யும் இரண்டு மூன்று ஆண்டுகள் பெற்​றேன்’’ என்​றார்.

மேற்கு வங்​கத்​தில் சமீபத்​தில் சட்​ட​விரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்​கைகள் தொடங்​கிய பிறகு நிலைமை எவ்​வாறு மாறியது என்​பதை மற்​றொரு குடியேறி கூறும்போது, “திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்​சி​யின் போது எங்​களை யாரும் எது​வும் சொல்லவில்​லை. இப்​போது ஆட்சி மாறி​விட்​டது. இப்​போது மக்​கள் எங்​களைத் துரத்​துகிறார்​கள். வங்​கதேச மக்​களைத் தங்க வைத்தால் தங்​களுக்கு ரூ.2 லட்​சம் அபராத​மும், 2 ஆண்​டு​கள் சிறைத் தண்​டனை​யும் விதிக்​கப்​படும் என்று வீட்டு உரிமையாளர்கள் பயப்​படு​கிறார்​கள்’’ என்​றார்.

மம்தா பானர்​ஜி​யின் லட்​சுமீர் பந்​தர் திட்​டத்​தின் கீழ் தகு​தி​யற்ற 30 லட்​சம் மக்​கள் பணப் பலன்​களைப் பெற்று வரு​வ​தாக மேற்கு வங்க முதல்​வர் சுவேந்து அதி​காரி புதன்​கிழமை தெரி​வித்​தார். இந்​தி​யர் அல்​லாதவர்​கள் உட்பட இந்த போலி பயனாளி​கள் நீக்கப்பட்​டுள்​ள​தாக​வும், புதிய ‘அன்​னபூர்ணா பந்​தர்' திட்டத்தின் கீழ் அவர்​களுக்​குப் பலன்​கள் கிடைக்​காது என்​றும் அவர் கூறினார். தற்​போது வங்​கதேசத்​திற்​குத் திரும்​பும் அல்​லது மேற்கு வங்க எல்​லைக்கு அரு​கில் காத்​திருக்​கும் பலர், தாங்​கள் பல ஆண்டு​களாக இந்​தி​யா​வில் இருந்​த​தாகக் கூறினர்.

ஹக்​கிம்​பூர் எல்​லைக்கு அருகே தனது மனைவி மற்​றும் குழந்தையுடன் காத்​திருந்த சலாம் தாலி என்​பவர், இந்​தி​யா​வில் தச்​ச​ராக வேலை பார்த்​த​தாக ‘இந்​தியா டுடே' சேனலிடம் தெரிவித்தார். வங்​கதேசத்​தின் குல்னா மாவட்​டத்​தைச் சேர்ந்த இவர் சுமார் 5 ஆண்​டு​களுக்கு முன் ஒரு இடைத்​தரகருக்கு ரூ.8,000-10,000 கொடுத்து இந்​தி​யா​வுக்​குள் நுழைந்​த​தாகக் கூறி​னார்.

மற்​றொரு குடியேறி ஏபிபி நியூஸிடம் கூறுகை​யில், தனக்கு 10 வயது இருக்​கும் போது தனது பெற்​றோர் தன்னை இந்​தி​யா​வுக்கு அழைத்து வந்​த​தாகக் கூறி​னார். ‘‘நான் சிறிய​வ​னாக இருந்​த​போது என் பெற்​றோர் என்னை இந்த நாட்​டுக்கு அழைத்து வந்​தனர். தந்தை தச்​ச​ராக வேலை பார்த்​தார். யாரும் எது​வும் சொல்லவில்லை. நாங்​கள்​ வேலை செய்​தோம்​, சாப்​பிட்​டோம், இங்​கேயே தங்கினோம்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT