பெங்களூரு: இசைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பெங்களூருவில் வரும் ஜனவரி 10-ம் தேதி இசை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் இளையராஜா நடத்த உள்ளார்.
கர்நாடகாவில் உள்ள 23 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் அக்சய பாத்ரா பவுண்டேஷனின் வெள்ளி விழாவையொட்டி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அக்சய பாத்ரா பவுண்டேஷனின் வளர்ச்சி நிதிக்காக இந்த இசைநிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.