இந்தியா

“மதச்சார்பின்றி செயல்படுகிறேன்” - மேற்கு வங்க முதல்வர் மம்தா கருத்து

செய்திப்பிரிவு

கொல்கத்தா: கொல்கத்தாவில் துர்கா தேவிக்காக புதிய கலாச்சார மையம் கட்டப்படுகிறது. இந்த மையத்துக்கு முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அடிக்கல் நாட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது: நான் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுவதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது முற்றிலும் தவறு. நான் மதச்சார்பின்மையை கடைப்பிடிக்கிறேன். அனைத்து மதங்களின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறேன். கோயில், குருத்வாரா, தேவாலயம் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செல்கிறேன். ஆனால் முஸ்லிம் மதம் சார்ந்த நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பதாக சிலர் விமர்சிக்கின்றனர்.

மதச்சார்பின்மை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க தொடர்ந்து பணியாற்றுவேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்ஐஆர்) என்ற பெயரில் மேற்குவங்க மக்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். எஸ்ஐஆர் பணியால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT