இந்தியா

பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவியை சுட்டுக்கொன்ற கணவர்

இரா.வினோத்

பெங்களூரு: பெங்​களூரு​வில் விவாகரத்து கோரி நோட்​டீஸ் அனுப்​பிய மனை​வியை அவரது கணவர் சுட்​டுக்​கொன்ற சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சேலம் மாவட்​டத்​தைச் சேர்ந்த பொறி​யாளர் பால​முரு​கன் (40). அதே ஊரை சேர்ந்த வங்கி ஊழியர் புவனேஸ்​வரியை (39) கடந்த 2011-ம் ஆண்டு திரு​மணம் செய்து கொண்​டார். பணி நிமித்​த​மாக இரு​வரும் பெங்​களூரு​வுக்கு இடம்​பெயர்ந்​தனர். இந்த தம்​ப​தி​யினருக்கு 2 குழந்​தைகள் உள்ள நிலை​யில் இரு​வரிடையே கருத்து வேறு​பாடு ஏற்​பட்​டது. இதனால் கணவனும் மனை​வி​யும் கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக தனித் தனியே வசித்து வந்​தனர்.

இந்​நிலை​யில் புவனேஸ்​வரி நேற்று பணி முடிந்து மாலை 7 மணி​ அள​வில் மாகடி சாலை​யில் உள்ள தனது வீட்​டுக்கு நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த பால​முரு​கன் அவரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்டு தான் மறைத்து வைத்​திருந்த துப்​பாக்​கி​யால் தனது மனை​வியை 4 முறை சுட்​டார். இதனால் படு​காயமடைந்து சுருண்டு விழுந்த புவனேஸ்​வரியை அரு​கில் இருந்​தவர்​கள் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​றனர். அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

இதனிடையே பால​முரு​கன் தானாக மாகடி சாலை காவல் நிலை​யத்​துக்கு சென்று சரணடைந்​தார். அவரிடம் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், விவாகரத்து நோட்​டீஸ் அனுப்​பிய​தால் சுட்​டுக்​கொன்​ற​தாக கூறி​யுள்​ளார். இருப்​பினும் போலீ​ஸார் அவருக்கு துப்​பாக்கி கிடைத்​தது எப்​படி என்​பது குறித்து வி​சா​ரிக்கின்​றனர்​.

SCROLL FOR NEXT