இந்தியா

மேற்கு வங்கத்தில் ஒவைசியுடன் ஹுமாயூன் கபீர் கட்சி கூட்டணி - மம்தா பானர்ஜிக்கு நெருக்கடி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: அசாதுதீன் ஒவைசி​ தலைமையிலான ஏஐஎம்​ஐஎம் கட்​சி, மேற்கு வங்​க தேர்தலில் போட்​டி​யிடு​கிறது. இங்கு திரிண​மூல் கட்​சியி​லிருந்து விலகி ஆம் ஜனதா உன்​னையன் கட்சி (ஏஜே​யுபி) என புதிய கட்சி தொடங்​கி​யுள்ள ஹுமாயூன் கபீருடன் ஏஐஎம்​ஐஎம் இம்​முறை கூட்​டணி அமைத்​துள்​ளது. முர்​ஷி​தா​பாத் எம்​எல்​ஏ​வான இவர் அப்​பகு​தி​யில் பாபர் மசூதி கட்டி வரு​வ​தால் பிரபல​மாகி வரு​கிறார்.

இதுகுறித்து ஒவைசி கூறுகை​யில், “மேற்கு வங்​கத்​தில் 2016-ல் பாஜக​வுக்கு 3 எம்​எல்​ஏக்​கள் இருந்​தனர். அது தற்​போது 77 ஆக உயர்ந்​துள்​ளது. இங்கு பாஜக​வின் வளர்ச்​சி​யைத் தடுக்க சகோ​தரர் ஹுமாயூன் கபீருடன் இணைந்து போட்​டி​யிடு​கிறோம்" என்​றார்.

          

ஹுமாயூன் கபீர் கூறுகை​யில், "அண்​ணன் ஒவைசி எடுக்​கும் ஒவ்​வொரு முடிவு மற்​றும் வழி​காட்​டு​தலின்​படி நான் முன்​னேறிச் செல்​வேன். இந்​தக் கூட்​டணி ஒரு​போதும் முறி​யாது. வரும் காலங்​களில் நடைபெறும் மக்​கள​வைத் தேர்​தல்​களை​யும் இணைந்து எதிர்​கொள்​வோம்” என்​றார்.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முதல் முஸ்​லிம்​களின் முக்​கி​யத் தலை​வரும் எம்​எல்​ஏவு​மான நவுஷாத் சித்​திக்​கீ​யின் இந்​திய மதச் சார்​பற்ற முன்​னணி (ஐஎஸ்​எப்) கட்​சி, மம்​தாவுக்கு தலை​வலி​யாக நீடிக்​கிறது. இந்​தக் கட்​சி​யுடன் ஹுமாயூன் கபீர் கட்சி ஏற்​கெனவே கூட்​டணி அமைத்​துள்​ளது. மேற்கு வங்​கத்​தில் முஸ்​லிம் வாக்​காளர்​கள் சுமார் 30% உள்​ளனர். மாநிலத்​தில் மொத்​த​முள்ள 294 தொகு​தி​களில் சுமார் 114 இடங்​களில் முஸ்​லிம்​களின் வாக்​கு​கள் வெற்​றியை நிர்​ண​யிக்​கின்​றன.

முஸ்​லிம்​களின் ஆதர​வு, அம்​மாநிலத்தை 15 வருடங்​களாக ஆட்சி புரி​யும் மம்​தாவுக்கு பெரும் உதவி​யாக உள்​ளது. அவரது வாக்​கு​களைப் பிரிக்​கும் வகை​யில் ஒவைசி​யுடன் ஹுமாயூன் அமைத்த கூட்​டணி மம்​தாவை சிக்​கலில் தள்ள வாய்ப்​பாக உள்​ளது.

இத்​துடன், தேர்​தல் ஆணை​யத்​தின் எஸ்​ஐஆர் பணி​யும் முதல்​வர் மம்​தாவுக்கு சிக்​கலை உரு​வாக்கி விட்​டது. முஸ்​லிம்​கள் அதி​கம் உள்ள சுமார் 100 தொகு​தி​களில் பல லட்​சம் வாக்​காளர்​கள் தற்​போது சட்​டரீ​தி​யான ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர். இது​போன்ற காரணங்​களால், அரசி​யல்​ சமன்​பாடு​கள்​ வேக​மாக மாறி வருகின்​றன.

SCROLL FOR NEXT