இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை, வெள்ளம்: அசாமில் பஸ், ரயில் சேவை முடங்கியது - 22,000 பேர் பரிதவிப்பு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: வடகிழக்கு மாநிலங்​களில் பெய்​யும் கனமழையால் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. அசாமில் சுமார் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வரு​கின்​றனர். ஏராள​மான ரயில் சேவை​கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வடமாநிலங்​களில் பரு​வ​மழை தீவிரமடைந்து வரு​கிறது. குறிப்பாக அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்​கிம், மேகாலயா உள்​ளிட்ட வடகிழக்கு மாநிலங்​களில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வரு​கிறது. அசாமின் தேமாஜி, நல்​பாரி, திப்ரூகர், சிரங், லக்​கிம்​பூர், கோக்​ராஜார் மாவட்​டங்​களில் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டிருக்​கிறது. இந்த மாவட்​டங்​களில் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வருகின்றனர். 1,690 ஹெக்​டேரில் பயி​ரிடப்​பட்டு இருந்த பயிர்​கள் சேதமடைந்து உள்​ளன.

அசாமின் அர்ச்​சிப​தார் மற்​றும் சிமென் சப்​பாரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்​றுப் பாலம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்டு உள்​ளது. இதனால் அங்கு ரயில் போக்குவரத்து முழு​மை​யாக ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மேலும் கனமழை, வெள்​ளத்​தால் வடகிழக்​கில் பல்​வேறு ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்​பட்டு உள்​ளன. அசாம் வெள்ள பாதிப்பு குறித்து அந்த மாநில முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா​வும் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷாவும் நேற்று தொலைபேசி​யில் முக்கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

இதுகுறித்து முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா சமூக வலைதளத்தில் வெளி​யிட்ட பதி​வில், “கனமழை​யால் அசாமின் தேமாஜி மாவட்​டம் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய அமைச்​சர் அமித் ஷா தொலைபேசி​யில் என்​னோடு ஆலோ​சனை நடத்​தி​னார். அசா​முக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் வழங்க அவர் உறுதி அளித்​தார்’’ என்றார்.

அருணாச்சல பிரதேசம், மேகால​யா, சிக்​கிம் உள்​ளிட்ட மாநிலங்களில் கனமழை​யால் நிலச்​சரிவு​கள் ஏற்​பட்டு சாலை போக்​கு​வரத்து முடங்கி உள்​ளது. அருணாச்சல பிரதேசத்​தின் கெயி பயனார் பகு​தி​யில் ஏற்​பட்ட காட்​டாற்று வெள்​ளத்​தில் 4 பேர் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். அவர்​களை தேடும் பணி தீவிரப்​படுத்​தப்​பட்டு உள்​ளது. வெள்ள பாதிப்​பால் அங்கு சிக்​கித் தவித்த 30 சுற்​றுலாப் பயணி​கள் ஹெலி​காப்​டர் மூலம் பத்​திர​மாக மீட்கப்பட்டனர்.

அடுத்த சில நாட்​களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்​யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்​சரிக்கை விடுத்துள்ளது. இதன்​ காரண​மாக தேசிய பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள், அந்​தந்த மாநிலங்​களின் பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள் வெள்ள பாதிப்பு பகு​தி​களுக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளனர்.

SCROLL FOR NEXT