இந்தியா

டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை: படிக்கட்டு மோதியதில் 3 ஏர் இந்தியா விமானம் சேதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்​லி​யில் நேற்று பலத்த காற்​றுடன் கனமழை பெய்​த​தில் விமான நிலை​யத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த படிக்​கட்டு நகன்று மோதி​ய​தில் ஏர் இந்​தி​யா​வின் 3 விமானங்​கள் சேதம் அடைந்​தன.

டெல்​லி​யில் நேற்று மாலை 4.40 மணிக்கு பலத்த காற்​றுடன் கன மழை பெய்​தது. மணிக்கு 60 கி.மீ வேகத்​தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரி​வித்​திருந்​தது. ஆனால், அங்கு மணிக்கு 101 கி.மீ வேகத்​தில் காற்று வீசி​யது.

இதனால் இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் 2-வது முனை​யத்​தில் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த சக்​கரங்​களு​டன் கூடிய விமான படிக்​கட்டு வேக​மாக நகர்ந்து அரு​கில் நின்​றிருந்த ஏர் இந்​தியா விமானங்​களை நோக்​கிச் சென்​றது. அதை தடுத்து நிறுத்த விமான நிலைய பணி​யாளர்​கள் ஓடினர்.

ஆனால், அதற்​குள் படிக்​கட்டு விமானங்​கள் மீது மோதி​யது. இதில் 3 விமானங்​கள் சேதம் அடைந்​தன. 2 விமானங்​களில் லேசான சேதம் ஏற்​பட்​ட​தால், அது உடனடி​யாக சரி செய்​யப்​பட்டு பயணத்துக்​கு த​யா​ரானது.

SCROLL FOR NEXT