இந்தியா

மத்திய பட்ஜெட்டில் சுகாதார அமைச்சக நிதி ஒதுக்கீடு 10 சதவீதம் அதிகரிப்பு

செய்திப்பிரிவு

இந்த ஆண்​டுக்​கான பட்​ஜெட்​டில் மத்​திய சுகா​தார அமைச்​சகத்​துக்கு ரூ.1 லட்சத்து 6,530.42 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது 2025-26-ம் ஆண்டை விட 10 சதவீதம் அதி​க​மாகும்.

இந்​தி​யாவை ஒரு முதன்மை மருத்​துவ சுற்​றுலா மைய​மாக மேம்​படுத்​து​வதற்​காக, தனி​யார் துறை​யுடன் இணைந்து 5 பிராந்​திய மருத்​துவ மையங்​களை அமைப்​ப​தில் மாநிலங்​களுக்கு உதவி செய்​யும் ஒரு திட்​டத்தை மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது.

          

இந்த மையங்​கள் மருத்​து​வம், கல்வி மற்​றும் ஆராய்ச்சி வசதி​களை கொண்ட ஒருங்​கிணைந்த சுகா​தார வளாகங்​களாக செயல்​படும் என்று அமைச்​சர் நிர்​மலா தனது பட்​ஜெட் உரை​யில் கூறி​னார். துணை சுகா​தா​ரப் பணி​யாளர்​களுக்​கான தற்​போதுள்ள கல்வி நிறு​வனங்​கள் மேம்​படுத்​தப்​படும்.

“இது கண் மருத்​து​வம், கதிரியக்​க​வியல், மயக்க மருந்​து, அறுவை சிகிச்சை தொழில்​நுட்​பம், அப்​லைடு சைக்​காலஜி உள்​ளிட்ட 10 துறை​களில் அடுத்த 5 ஆண்​டு​களில் 1 லட்​சம் துணை சுகா​தா​ரப் பணி​யாளர்​களை உரு​வாக்​கும்” என்று அவர் கூறி​னார்.

சுகா​தா​ரம் மற்​றும் குடும்ப நல அமைச்​சகத்​துக்கு ஒதுக்​கப்​பட்ட ரூ.1 லட்​சத்து 6,530.42 கோடி​யில், சுகா​தா​ரம் மற்​றும் குடும்ப நலத் துறைக்கு ரூ.1 லட்​சத்து 1,709.21 கோடி​யும், சுகா​தார ஆராய்ச்​சித் துறைக்கு ரூ.4,821.21 கோடி​யும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. முதல் முறை​யாக துணை சுகா​தா​ரப் பணி​யாளர்​களுக்​கான திட்​டத்​துக்கு சுகா​தார அமைச்​சகம் ரூ.1,000 கோடி ஒதுக்​கி​யுள்​ளது.

SCROLL FOR NEXT