இந்தியா

அசாமில் காங்கிரஸுக்கு ஹாட்ரிக் தோல்வி உறுதி: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம்

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாமில் காங்​கிரஸுக்கு ஹாட்​ரிக் தோல்வி உறுதி என்​றும் பாஜக கூட்​ட​ணிக்கு ஹாட்​ரிக் வெற்றி கிடைக்​கும் என்​றும் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

அசாம் சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. அதன் முடிவு​கள் மே 4-ம் தேதி அறிவிக்​கப்பட உள்​ளன. இந்​நிலை​யில், கோகா​முக் நகரில் பாஜக சார்​பில் நேற்று நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் நரேந்​திர மோடி பேசி​ய​தாவது:

          

அசாம் தேர்​தல் அறிவிக்​கப்​பட்ட பிறகு நான் பங்​கேற்​கும் முதல் பொதுக்​கூட்​டம் இது. என் முன்னே திரண்​டுள்ள இந்த மக்​கள் கடல், இளைஞர்​களின் உற்​சாகம், சகோ​தரி​கள் மற்​றும் மகள்​களின் ஆசிகள் ஆகியவை இம்​முறை ஹாட்​ரிக் வெற்றி நிச்​ச​யம் என்​ப​தற்​கான அறிகுறி ஆகும்.

அதே​நேரம் காங்​கிரஸ் கட்​சிக்கு இங்கு ஹாட்​ரிக் தோல்வி கிடைக்​கும். காங்​கிரஸின் சுயம்​பு​வாக அறிவிக்​கப்​பட்ட ராஜகு​மாரர் (ராகுல் காந்​தி) தோல்வி​களில் சதம் அடிக்​கப் போகிறார்.

கடந்த 10 ஆண்​டு​களில் சர்​வானந்த சோனோ​வால் மற்​றும் ஹிமந்த பிஸ்வா சர்மா ஆகியோரின் தலை​மையி​லான ஆட்​சி, அசாமில் சேவை மற்​றும் நல்​லாட்​சி​யின் புதிய யுகத்​தைக் கண்​டுள்​ளது.

பாஜக​வின் தேர்​தல் அறிக்கை அசா​முக்கு மேலும் சுபத்​தைக்கொண்டு வரும். செவ்​வாய்க்​கிழமை வெளி​யான இந்த அறிக்கை ஒரு ‘மங்​கலப் பத்​திரம்' ஆகும். பொது சிவில் சட்​டத்தை அமல்​படுத்​து​வது,பழங்​குடி​யின சமூகத்​தின் மரபு​களை் பாது​காப்​பது குறித்த முக்​கிய அறி​விப்​பு​கள் அதில் வெளி​யிடப்​பட்​டுள்​ளன. அசாம் தேயிலைக்​குப் பெயர் பெற்​றது போல, விரை​வில் செமிகண்​டக்​டர் (சிப்) உற்​பத்தி மைய​மாக​வும் மாறும். காங்​கிரஸ் வெளி​நாட்​டினரை அசாமில் குடியேற்​றி, மண்​ணின் மைந்​தர்​களை சிறு​பான்​மை​யின​ராக மாற்ற விரும்​பு​கிறது. சட்​ட​விரோத ஆக்​கிரமிப்​புக்கு எதி​ரான பாஜக அரசின் நடவடிக்கை தொடரும். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT