இந்தியா

ஹரியானா ஜிம் உரிமையாளர் கொலை வழக்கு: லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் இருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ஹரி​யானா மாநிலம் ஹன்சி பகு​தி​யில் ஜிம் உரிமையாளர் படு​கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் தேடப்​பட்டு வந்த, பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்​டாளி​கள் இரு​வரை போலீ​ஸா​ர் என்​க​வுன்​ட்டரில் சுட்​டுக்​கொன்​றனர்.

டெல்லி மற்​றும் ஹரி​யானா போலீ​ஸார் சனிக்​கிழமை நள்​ளிரவு நடத்​திய தேடு​தல் வேட்​டை​யின் போது இந்த மோதல் சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. ஹரி​யா​னா​வின் பகதூர்​கர் பகு​தி​யில் ஜிம் உரிமை​யாளர் கொலை வழக்​கில் சம்​பந்​தப்​பட்ட குற்​ற​வாளி​கள் பதுங்​கி​யிருப்​ப​தாக தகவல் கிடைத்​தது. இதன் பேரில், டெல்லி போலீ​ஸின் சிறப்​புப் பிரி​வும் ஹரி​யானா மாநில சிறப்பு அதிரடிப்படை​யும் இணைந்து நேற்று முன்தினம் நள்​ளிரவு ஒரு கூட்டு ஆபரேஷனை மேற்​கொண்​டன.

அப்​போது போலீ​ஸாரை நோக்கி குற்​ற​வாளி​கள் துப்​பாக்​கி​யால் சுடத் தொடங்​கியதை அடுத்​து, தற்​காப்​புக்​காக போலீ​ஸார் நடத்திய பதில் தாக்​குதலில் லாரன்ஸ் பிஷ்னோய் - ஹாரி பாக்​ஸர் கும்​பலைச் சேர்ந்த பர்​வேஷ் மற்​றும் ஹிமான்ஷு ஆகிய இரு​வர் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி, ஹரியானா​வின் ஹன்சி பகு​தி​யில் கபில் என்ற உடற்​ப​யிற்​சிக் கூட உரிமை​யாளர், 6 முதல் 7 பேர் கொண்ட குழு​வினருக்கு பயிற்சி அளித்​துக் கொண்​டிருந்​த​போது மர்ம நபர்​களால் சுட்டுக்கொலை செய்​யப்​பட்​டார்.

சமூக வலை​ தளங்​களில் இந்த கொடூரக் கொலைச் சம்​பவத்​தின் சிசிடிவி காட்​சிகள் வெளி​யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்​தது. இந்த வழக்கை விசாரித்த ஹரியானா போலீஸார், கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட பர்வேஷ் மற்றும் ஹிமான்ஷு ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர். மேலும், அவர்களது தலைக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT