சண்டிகர்: ஹரியானா அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எரிபொருள் சிக்கனத்தை பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், முதல்வர் நயாப் சிங் சைனி காலை வேளையில் மிதிவண்டியில் சுக்னா ஏரியைச் சென்றடைந்தார்.
அங்கு நடைப்பயிற்சி மேற்கொண்டதோடு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது ‘ஆரோக்கியமான இந்தியா, ஆரோக்கியமான ஹரியானா' என்ற செய்தியையும் அவர் மக்களிடம் கொண்டு சேர்த்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.