மாணவி அகான்ஷாவின் தாய் நீலம் சதுர்வேதி

 
இந்தியா

“நீட் குற்றவாளியை தூக்கிலிடுங்கள்” - மாணவியின் தாய் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

நாக்பூர்: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சிக்கிய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என நீட் தேர்வு ரத்து காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அகான்ஷாவின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், நாக்பூரைச் சேர்ந்த அகான்ஷா சதுர்வேதி என்ற மாணவி தற்கொலை செய்தார். இவரது தாய் நீலம் சதுர்வேதி. நீட் விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா குறித்து அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது: “நாங்கள் மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோம். எந்த நடவடிக்கையும் எனது மகளை மீண்டும் கொண்டு வரப்போவதில்லை. எனக்கு நீதி மீது நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்துள்ளதால் எந்த பலனும் இல்லை. அது எங்களை திருப்திபடுத்தவில்லை. நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்.” இவ்வாறு நீலம் சதுர்வேதி கூறினார்.

SCROLL FOR NEXT