இந்தியா

மோடியின் வாராணசி தொகுதியில் ஒரு மணி நேரத்தில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நட்டு கின்னஸ் சாதனை

சீனாவின் சாதனையை முறியடித்த ‘நமோ வனம்’

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் வாராணசி மக்​களவை தொகுதி உறுப்​பின​ராக பிரதமர் நரேந்​திர மோடி உள்​ளார். அங்கு மாநக​ராட்சி சார்​பில் 350 ஏக்​கர் நிலப்​பரப்​பில் ‘நமோ வனம்’ என்ற பெயரில் ஒரு நகர்ப்​புறக் காடு உரு​வக்​கப்​பட்​டுள்​ளது. அதில் ஒரு மணி நேரத்​துக்​குள் 2,51,446 லட்​சம் மரக்​கன்​றுகள் நடப்​பட்டு புதிய கின்​னஸ் உலக சாதனை படைக்​கபப்​பட்​டுள்​ளது.

இதற்கு முன்பு சீனா​வில் ஒரு மணி நேரத்​தில் 1,53,981 மரக் கன்றுகள் நடப்​பட்​டது​தான் உலக சாதனை​யாக இருந்​தது. இந்த சாதனை இப்​போது முறியடிக்​கப்​பட்​டுள்​ளது. கங்கை நதித் தொடர்ச்சி மலைகளுக்கு அரு​கில் சுஜா​பாத் டோம்ரி பகுதியில் அமைந்துள்ள நமோ வனத்தில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பொதுநல அமைப்​பினர் உள்​ளிட்ட சுமார் 20,000 பொது​மக்​கள் பங்​கேற்​று மரக்​கன்​றுகளை நட்​டனர்.

          

நமோ வனம் திட்​டத்​தின் கீழ் மொத்​தம் 3,00,000 மரக்​கன்​றுகள் நடப்​படு​கின்​றன. இதில் 2,50,000 மியா​வாகி இன மரங்​கள், 10,000 பலகைகளுக்​கான மரங்​கள் மற்​றும் 40,000 பழ மரங்​கள் அடங்கும். இத்​துடன் நமோ வனம் திட்​டத்​தில் நான்கு கிலோ மீட்டர் நீளத்​தில் சிறப்பு நடை​பாதை அமைக்​கப்​படு​கிறது. இதில், தியானம் மற்​றும் யோகா பயிற்சி செய்​வதற்​கான வசதி​யும் உருவாக்​கப்​படு​கிறது.

அத்​துடன், குழந்​தைகள் விளை​யாட்டு பகுதி மற்​றும் திறந்​தவெளி உடற்​ ப​யிற்​சிக்​கான பகு​தி​யும் உரு​வக்​கப்​படு​கிறது. இந்​தப் பாதை​யின் இரு​புற​மும் நான்கு ஹெக்​டேர் மலர் பூங்​கா, இரண்டு ஹெக்​டேர் மூலிகை பூங்கா இடம்​பெறுகிறது. வரும் காலத்​தில் ஒரு இயற்கை மருத்​துவ தோட்​டம் நிறு​வ​வும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நமோ வனம், பல்​லு​யிர் பெருக்கத்தை மேம்​படுத்​துதல், கங்கை நதிக்​கரைகளை வலுப்படுத்​துதல், சுற்​றுச்​சூழல் சமநிலை பாது​காத்​தலில் குறிப்பிடத்​தக்க பங்கு வகிக்​கும்.

SCROLL FOR NEXT