இந்தியா

ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.11 லட்சம் கோடி: இறக்குமதி வரி வசூல் அதிகரிப்பால் நிபுணர்கள் கவலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாட்​டின் சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் கடந்த ஜூலை மாதத்​தில் 15.4 சதவீதம் உயர்ந்து ரூ.2,11,205 கோடியை எட்​டி​யுள்​ளது. குறிப்​பாக, இறக்​குமதி பொருட்​கள் மீது விதிக்​கப்​படும் ஒருங்​கிணைக்​கப்​பட்ட ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்​டி) வசூல் 29 சதவீதம் வரை அதி​கரித்​ததே இந்த வலு​வான வளர்ச்​சிக்கு முக்கியக் காரண​மாக அமைந்​துள்​ளது.

கடந்த ஆண்டு செப்​டம்​பரில் ஜிஎஸ்டி அமைப்​பில் மேற்கொள்ளப்பட்ட மாற்​றங்​களுக்​குப் பிறகு ஜூலை மாதத்​தில் 2-வது அதி​கபட்ச அளவாக ரூ. 2,11,205 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்​ளது. மேலும், வரி விகிதங்​கள் சீரமைக்​கப்​பட்ட பிறகு எட்​டப்​பட்ட மிக வேக​மான வளர்ச்​சி​யாக​வும் இது பார்க்கப்படுகிறது.

மேற்கு ஆசி​யப் பிராந்​தி​யத்​தில் நில​வும் போர்ச் சூழல் மற்​றும் பதற்​றங்​கள் காரண​மாக, கச்சா எண்​ணெய் மற்​றும் இதர அத்தியா​வசி​யப் பொருட்​களின் சர்​வ​தேச விலைகள் கணிச​மாக உயர்ந்​தன. கடந்த ஜூன் மாதத்​தில் நடை​பெற்ற இந்த வர்த்​தகப் பரிவர்த்​தனை​கள் மூலம், ஜூலை மாதத்​தில் வசூலிக்​கப்​பட்ட இறக்​குமதி மீதான ஒருங்​கிணைக்​கப்​பட்ட ஜிஎஸ்டி தொகை அதிகரித்துள்ளது.

வரித் திரும்ப அளிப்பு கணக்​கீட்​டிற்​குப் பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 15.8 சதவீதம் உயர்ந்து ரூ.1,81,237 கோடி​யாக உள்​ளது. கடந்த மாதத்​தில் வழங்​கப்​பட்ட வரித் திரும்ப அளிப்​புத் தொகை 13% அதி​கரித்து சுமார் ரூ.30,000 கோடியைத் தொட்​டுள்​ளது.

மாநில அளவி​லான வளர்ச்​சி​யில் ஹரி​யானா 28 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்​தில் உள்​ளது. இதையடுத்து குஜ​ராத், புதுச்​சேரி (26%), கர்​நாட​கா, கோவா (23%), மகா​ராஷ்டிரா (20%) ஆகிய மாநிலங்​கள் உள்​ளன.

அதேவேளை​யில், சத்​தீஸ்​கர் (23% சரிவு), ஜார்க்​கண்ட் மற்​றும் மணிப்​பூர் (20% சரிவு) ஆகிய மாநிலங்​கள் வரி வசூலில் பின்​னடைவைச் சந்​தித்​துள்​ளன. மத்​திய ஜிஎஸ்டி 12.3% உயர்ந்து ரூ.40,000 கோடி மாநில ஜிஎஸ்டி சுமார் ரூ.48,000 கோடியை எட்டியுள்​ளது. எனினும், இறக்​குமதி ஜிஎஸ்டி உயர்ந்து வரு​வது கவலை அளிப்​ப​தாக உள்​ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.ட்

SCROLL FOR NEXT