சவுரவ், கவுரவ்
புதுடில்லி: கோவாவில் உள்ள பிர்ச் இரவு விடுதியில் கடந்த 6-ம் தேதி நடந்த தீ விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்சார வெடிகள் மரத்தாலான கூரையில் பட்டதே இந்த தீ விபத்துக்கு காரணம் என்பதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த விடுதியின் உரிமையாளர்களான சவுரவ் லுத்ரா மற்றும் கவுரவ் லுத்ரா இந்தியாவை விட்டு தாய்லாந்துக்கு தப்பியோடினர்.
தப்பியோடிய லுத்ரா சகோதரர்களை பிடிக்க சிபிஐ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தொடர்ச்சியாக எடுத்து வந்த முயற்சியினையடுத்து அவர்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து நேற்று இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.