இந்தியா

ஓடிபி இல்லாமல் 1 மணி நேரத்தில் ரூ.78 லட்சம் சுருட்டிய மர்ம நபர்கள் - மும்பை போலீஸ் விசாரணை

செய்திப்பிரிவு

மும்பை: ​மும்​பை​யில் உள்ள ஒரு தங்​க நகைக் கடன் நிறுவனத்தில் ஓடிபி ஏது​மின்றி ஒரு மணி நேரத்​தில் ரூ.78.10 லட்சத்தை மர்ம நபர்​கள் சுருட்​டி​யுள்​ளனர்.

மகா​ராஷ்டிர மாநிலம், மும்பை பரேல் பகு​தி​யில் ஒரு தங்​க நகைக் கடன் நிறு​வனம் உள்​ளது. அதன் கடன் வழங்​கும் மென்​பொருள், வங்​கி​யுடன் நேரடி​யாக இணைக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிறு​வனத்​தில் வாடிக்​கை​யாளர்​களுக்கு கடன் ஒப்​புதலானதும், சிறப்பு மென்​பொருள் இணைப்பு மூலம் வங்​கிக்​குத் தானாகவே தகவல் சென்​று​விடும் வசதி இருந்​தது.

இதைப் பயன்​படுத்​திய மர்ம நபர்​கள், கடந்த ஜூலை 13ம் தேதி அந்த மென்​பொருளை ஊடுரு​வி, உண்​மை​யான கடன் கோரிக்கை போன்றே போலி​யான கோரிக்​கைகளை உருவாக்கியுள்​ளனர். இதன் மூலம், நிறுவன அதி​காரி​களின் ஒப்புதலோ அல்​லது ஓடிபியோ தேவை​யில்​லாத வகை​யில், ஒரு மணி நேரத்​தில் ரூ.2 லட்​சம் முதல் ரூ.7 லட்​சம் வரை என மொத்​தம் 18 முறை பணப் பரி​மாற்​றம் செய்​துள்​ளனர்.

இவ்​வாறு சுருட்​டப்​பட்ட ரூ.78.10 லட்​சம் தொகை ஜம்மு காஷ்மீர், கேரளா மற்​றும் மகா​ராஷ்டிர மாநிலங்​களில் உள்ள பல்​வேறு வங்கிக் கணக்​கு​களுக்​குப் பிரித்து மாற்​றப்​பட்​டுள்​ளது. இந்நிலையில் ஜூலை 14 அன்று வழக்​க​மான கணக்​குச் சரி​பார்ப்பின் போது, வாடிக்​கை​யாளர்​களுக்​குத் தராத சந்தேகத்திற்குரிய பணப் பரி​மாற்​றங்​கள் கண்​டறியப்​பட்​டன. இதையடுத்து மேற்​கொள்​ளப்​பட்ட உள் தணிக்​கை​யில், இது சைபர் திருட்டு என்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

இதைத் தொடர்ந்​து, 16ம் தேதி ‘1930’ என்ற சைபர் உதவி எண்​ணில் அந்​நிறு​வனம் புகார் அளித்​தது. புகாரின் பேரில் 17ம் தேதி போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்​தனர். தற்​போது, பணம் கைமாறிய வங்​கிக் கணக்​கு​களை முடக்க உத்தரவிட்டுள்ள சைபர் க்ரைம் போலீ​ஸார், இந்த கொள்​ளை​ குறித்து​ தீவிர விசாரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT