இந்தியா

செய்தித்தாளில் உணவு பரிமாறினால் நடவடிக்கை: உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தீவிரம்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: நாடு முழு​வதும் பொது​மக்​களின் உடல்​நலனைப் பாது​காக்​கும் வகை​யில், ‘உணவு பாது​காப்பு மற்​றும் தர நிலை (பேக்​கேஜிங்) விதி​முறை​கள் 2018’ சட்​டத்​தின் கீழ், செய்​தித்​தாள்​களில் உணவு​களைப் பொட்​டல​மாக கட்டி விற்​ப​தற்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

எனினும், தேநீர் கடைகள், சாலை​யோரக் கடைகளில் சூடான வடை, போண்​டா, பஜ்ஜி, வடா பாவ், சமோசா அல்​லது சாட் வகை உணவு​கள் அதி​க​மாக செய்​தித்​தாள்​களில் கட்டி விநி​யோகிக்​கப்​படு​கின்​றன.

ஆனால், அதி​காரி​கள் எந்த நடவடிக்​கை​யும் எடுப்​ப​தில்​லை. இந்த விவ​காரத்​தில் கவன​மாக இருக்​கும்​படி பொது​மக்​களுக்கு இந்​திய உணவு பாது​காப்பு மற்​றும் தர நிர்ணய ஆணை​யம் (எப்​எஸ்​எஸ்​ஏஐ) மீண்​டும் எச்​சரித்​துள்​ளது.

மேலும், நாடு முழு​வதும் உள்ள அனைத்து உணவு விற்​பனை​யாளர்​கள், உணவக உரிமை​யாளர்​கள் மற்​றும் உணவு வணி​கம் செய்​பவர்​களுக்கு எப்​எஸ்​எஸ்ஏஐ ஒரு எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. அதன்​படி, செய்​தித்​தாள்​களில் உணவைப் பொட்​டலம் கட்​டு​வதற்கோ அல்​லது பரி​மாறு​வதற்கோ உடனடி​யாகத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மும்​பை​யில் பிரபல​மான வடா பாவ் விற்​பனை​யாளர் ஒரு​வர் வாடிக்​கை​யாளர்​களுக்​குச் செய்​தித்​தாள்​களில் உணவைப் பரி​மாறு​வதும் பொட்​டலங்​களாகக் கட்​டிக் கொடுப்​ப​தை​யும் வாடிக்​கை​யாகக் கொண்​டிருந்​தார். இதுகுறித்து புகார்​கள் எழுந்​த​தால், எப்​எஸ்​எஸ்ஏஐ நிறு​வனத்​தின் மேற்கு மண்​டலப் பிரிவு, மும்பை மாநக​ராட்சி அதி​காரி​கள் இணைந்து அந்​தக் கடை மீது நடவடிக்கை எடுத்​தனர். இதைதொடர்ந்​து, எப்​எஸ்​எஸ்ஏஐ உத்​தரவை மீறு​பவர்​கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அதி​காரி​கள் எச்​சரித்​துள்​ளனர்.

செய்​தித்​தாளில் உள்ள கருப்பு மையில் தீங்கு விளைவிக்​கும் ரசாயனங்​கள், சாயங்​கள் மற்​றும் ஈயம் போன்​றவை உள்​ளன. சூடான உணவை செய்​தித்​தாள் மீது வைக்​கும் போது, இந்த மை உருகி உணவோடு கலக்​கிறது.

இது தீவிர உடல்​நலப் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தும் என்று எப்​எஸ்​எஸ்ஏஐ எச்​சரித்​துள்​ளது. செய்​தித்​தாள்​களில் உணவை பொட்​டல​மாகக் கட்டி கொடுப்​பது குறித்து அறிந்​தால், உடனடி​யாக புகார் அளிக்க வேண்​டும்​ என்​றும்​ எப்​எஸ்​எஸ்​ஏஐ அறி​வுறுத்​தியுள்​ளது.

SCROLL FOR NEXT