இந்தியா

கர்நாடகாவில் சிபிஐ அதிகாரிகளை போல நடித்து தொழிலதிபரிடம் ரூ.15.45 கோடி மோசடி

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெல​காவி மாவட்​டம் நேதாஜி நகரை சேர்ந்​தவர் அஜித் கோபால​கிருஷ்ண சராஃப் (81). கிரானைட் தொழில​திப​ரான இவருக்கு கடந்த பிப்​ர​வரி 5-ம் தேதி வாட்ஸ் அப் மூலம் அழைப்பு ஒன்று வந்​தது. அதில் பேசிய நபர் தன் பெயர் கே.சிவ சுப்​ரமணி​யம் என்றும் டெல்​லி​ சிபிஐ அலு​வல​கத்​தில் இருந்து பேசுவ​தாகவும் கூறி​யுள்​ளார்.

மேலும் அவர், பண மோசடி வழக்​கில் சிக்​கி​யுள்ள தொழில​திபர் நரேஷ் கோயலுக்​கும் உங்​களுக்​கும் தொடர்பு இருப்​பதை சிபிஐ கண்​டறிந்​துள்​ளது. அதனால், உங்​கள் மீது அந்​நியச் செலா​வணி மோசடி வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. எனவே உங்​களது வெவ்​வேறு வங்கிக் கணக்​கு​களில் உள்ள பணத்தை நாங்​கள் கூறும் வங்கி கணக்​குக்கு 7 நாட்​களுக்​குள் அனுப்ப வேண்​டும். இந்த தகவலை வெளியே கசிய விட்​டால் உங்​களை​யும் உங்​கள் மனை​வியை​யும் கைது செய்​து​விடு​வோம்.

          

நீங்​கள் அனுப்​பிய பணத்தை சரி​பார்த்த பின்​னர், உங்​களது வங்கி கணக்​குக்கே திருப்பி அனுப்பி விடு​வோம். நாங்​கள் உங்​களை 24 மணி நேர​மும் கண்​காணித்து கொண்டே இருப்​போம். எங்​களிடம் இருந்து தப்ப முயன்​றால் உள்​ளூர் போலீ​ஸார் மூலம் கைது செய்​​வோம் என மிரட்​டி​யுள்​ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது வங்கிக் கணக்​கு​களில் இருந்த ரூ.15.45 கோடியை படிப்​படி​யாக அனுப்பி உள்​ளார்.

ஆனால், 15 நாட்​களுக்கு மேலாகி​யும் பணம் தனது வங்கி கணக்​கில் செலுத்​தப்​ப​டாத​தால் அதிர்ச்சி அடைந்​தார். நேற்று பெல​காவி மாநகர இணைய குற்​றப்​பிரிவு காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதையடுத்து போலீ​ஸார் அவர் தெரி​வித்த வங்கி கணக்​கில் இருந்த ரூ.90 லட்​சம் தொகையை முடக்​கி​யுள்​ளனர். மேலும் 4 பிரிவு​களின் ​கீழ் வழக்​கு ப​திவு செய்​து வி​சா​ரித்து வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT