இந்தியா

கர்நாடகாவில் கார்கே உட்பட 4 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடகாவில் இருந்து காங்​கிரஸ் தேசி​யத் தலைவர் மல்​லி​கார்​ஜுன கார்கே உட்பட 4 பேர் மாநிலங்களவைக்​குப் போட்​டி​யின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கர்​நாடகாவில் காலி​யாக இருந்த 4 மாநிலங்​களவை இடங்​களுக்கு ஜூன் 18ம் தேதி தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் சட்டபேரவை​யில் உள்ள எம்​எல்​ஏ.க்​களின் எண்​ணிக்​கைக்கு ஏற்ப காங்​கிரஸுக்கு 3 இடங்​களும், பாஜக​வுக்கு 1 இடமும் கிடைக்​கும்.

காங்​கிரஸ் சார்​பில் கட்​சி​யின் தேசிய தலை​வரும், மாநிலங்களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான மல்​லி​கார்​ஜுன கார்​கே, மூத்த நிர்​வாகி​கள் பவன் கேரா, மன்​சூர் அலி கான் ஆகியோரும் பாஜக சார்​பில் பேரா.​நாகராஜும் வேட்பு மனு தாக்கல் செய்​தனர். வேறு வேட்​பாளர்​கள் யாரும் போட்டியிடாததால் நால்​வரும் எளிதாக வெற்றி பெறும் நிலை உருவானது.

இந்​நிலை​யில் கர்​நாடக சட்​டப்​பேரவை செய​லா​ளர் விசாலாக் ஷி நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், "கர்​நாட​கா​வில் 4 மாநிலங்களவை இடங்​களுக்​கான தேர்​தலில் போட்டி வேட்பாளர்கள் யாரும் இல்​லை. எனவே, மல்​லி​கார்​ஜுன கார்​கே, பவன் கேரா, மன்​சூர் அலி​கான், நாக​ராஜ் ஆகிய 4 பேரும் போட்டியின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்​" என கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT