புதுடெல்லி: டெல்லி லக் ஷ்மி நகரைச் சேர்ந்த வினய் குப்தா (31) என்ற ஐ.டி. ஊழியருக்கும், ரேகாவுக்கும் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைக்கு மருந்து கொடுப்பதில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரேகா, தனது பெற்றோர், சகோதரர்களை அழைத்து வந்துள்ளார். அவர்கள் வினய்யை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வினய், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இக்கொலை தொடர்பாக மனைவி ரேகா, அவரது இரு சகோதரர்கள் உட்பட 4 பேரை கைது செய்துள்ளனர்.