இந்தியா

ஜம்மு காஷ்மீரில் சிஐஎஸ்எப் வீரர் சுட்டதில் 4 சக வீரர்கள் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்​டம், பசோலி கிராமத்​தில் நீர் மின் நிலை​யம் அமைந்​துள்​ளது. தீவிர​வாத அச்​சுறுத்​தல் காரண​மாக அங்கு மத்​திய தொழில் பாது​காப்​புப் படை (சிஐஎஸ்​எப்) வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்டு உள்​ளனர். நீர் மின் நிலை​யத்​தில் நேற்று பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டிருந்த சிஐஎஸ்​எப் வீரர்​களிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்டு உள்​ளது.

அப்​போது அவதேஷ் குமார் என்ற வீரர், ஏ.கே.47 ரக துப்​பாக்​கி​யால் சரமாரி​யாக சுட்​டார். இதில் துணை கமாண்​டர் அங்​கித் குமார் பாண்​டே, சப்​-இன்​ஸ்​பெக்​டர் லஷ்மண் சிங், காவலர்​கள் ரபீக் அகமது, சந்​தீப் குமார் ஆகியோர் படு​கா​யம் அடைந்​தனர். காயமடைந்த 4 பேரும் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். ஆனால் அவர்​கள் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர்.

துப்​பாக்​கிச்​சூடு நடத்​திய தலை​மைக் காவலர் அவதேஷ் குமார் கைது செய்​யப்​பட்​டார். எதற்​காக அவர் தாக்​குதல் நடத்​தி​னார் என்​பது குறித்து அவரிடம் வி​சா​ரணை நடத்​தப்​படு​கிறது.

SCROLL FOR NEXT