இந்தியா

ஆந்திராவில் ரூ.15,803 கோடி செலவில் போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு அடிக்கல்

என். மகேஷ்குமார்

புட்டபர்த்தி: ஆந்​திர மாநிலம், சத்​ய​சாய் மாவட்​டம், புட்​டபர்த்​தி​யில், நேற்று காலை மத்​திய பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் மற்​றும் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆகியோர் மேம்பட்ட நடுத்தர போர் விமான தொழிற்​சாலைக்கு அடிக்​கல் நாட்டினர்.

அப்​போது சந்​திர​பாபு நாயுடு பேசி​ய​தாவது: புட்​டபர்த்​தி​யில் 650 ஏக்​கரில் ரூ.15,803 கோடி செல​வில் போர் விமானங்​கள் தயாரிப்பு தொழிற்​சாலைக்கு அடிக்​கல் நாட்​டப்​பட்​டுள்​ளது. இதன் மூலம் ரூ.1 லட்​சம் கோடி முதலீடு​கள் ஆந்​தி​ரா​வுக்கு வர உள்​ளன. இனி ராயலசீமா மாவட்​டங்​கள் வறண்ட மாவட்​டங்​கள் அல்ல. பணம் கொழிக்​கும் மாவட்​டங்​களாக மாறும். கடப்பா இரும்பு தொழிற்​சாலை பணி​கள் ஜூன் மாதம் தொடங்கி 2028-க்​குள் முடிவடை​யும். நாட்​டிற்கே ஆந்​திரா ஒரு பாது​காப்பு கவச​மாக மாற உள்​ளது.

ஒரு காலத்​தில் தங்​கம் என்​றாலே கேஜிஎஃப். ஆனால் இப்​போது தங்​கம் என்​றால் ஆந்​தி​ரா​வில் உள்ள ஜொன்​னகிரி கோல்ட் ஃபீல்ட் ஆகும். இந்த ஆண்​டில் இங்கு 600 கிலோ தங்​க​மும், அடுத்த ஆண்டு முதல் 1500 கிலோ தங்​க​மும் உற்​பத்தி செய்​யப்​படும். தங்க உற்​பத்​தி​யில் ஆந்​திரா புரட்​சியை ஏற்​படுத்​தும். இவ்​வாறு சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.

விழா​வில் மத்​திய அமைச்​சர் ராஜ்​நாத் சிங் பேசி​ய​தாவது: ஆந்​தி​ரா​வில் கர்​னூலில் 8 ட்ரோன் நிறு​வனங்​கள் இணைந்து செயல்பட போகின்​றன. வரு​வாய், மருத்​து​வம், விவ​சாய துறை​களுக்கு கூட ட்ரோன் மிக​வும் உதவி​கர​மாக இருக்​கும். ஒரு கால கட்​டத்​தில் பாது​காப்பு துறை சம்​பந்​தப்​பட்ட வகை​யில், வெளி​நாடு​களில் இருந்து அதி​க​மாக பாது​காப்பு உபகரணங்​களை இறக்​குமதி செய்​வ​தில் இந்​தியா முதலிடத்​தில் இருந்​தது. ஆனால், இப்​போது நிலைமை தலைகீழாக மாறி​யுள்​ளது. அனைத்​தும் நாமே தயாரித்து கொள்​கிறோம்.

2004-ல் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்​புள்ள போர் சம்​பந்​தப்​பட்ட ஆயுத தயாரிப்பு மையங்​கள் மட்​டுமே நம்​மிடம் இருந்​தன. ஆனால் இப்​போது ரூ.1.75 லட்​சம் கோடி மதிப்​பில் ஆயுத தயாரிப்பு மையங்​கள் உள்ளன என்​ப​தில் நாம் பெருமை கொள்​வோம். இவ்​வாறு ராஜ்​நாத் சிங் பேசி​னார்.

இவ்​விழா​வில், மத்​திய அமைச்​சர் ராம்​மோகன் நாயுடு, ஆந்​திர மாநில அமைச்​சர்​கள் லோகேஷ், சத்​யபிர​சாத், பரத், சத்​யகு​மார் யாதவ் ஆகியோ​ரும் பங்​கேற்​றனர்.

SCROLL FOR NEXT