முகுல் ராய்

 
இந்தியா

முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் காலமானார்

மேற்குவங்க அரசியலில் முக்கியத் தலைவர்!

வேட்டையன்

கொல்கத்தா: முன்னாள் ரயில்வே அமைச்சர் முகுல் ராய் காலமானார். கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கட்கிழமை (பிப்.23) அதிகாலை 1.30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேற்குவங்க மாநிலத்தில் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முகுல் ராய். திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிறுவப்பட்டது முதல் அக்கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1998 முதல் 2015 வரையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக இருந்தார். 2006 முதல் 2017 வரையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 2-வது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய இணை அமைச்சர் மற்றும் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார்.

          

கடந்த 2017-ல் பாஜக-வில் அவர் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டு கிருஷ்ணாநகர் தொகுதியில் வெற்றி பெற்றார். பின்னர் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மேற்குவங்க மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT