இந்தியா

என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு புத்தகத்தில் குடிசைவாழ் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களா? - முன்​னாள் பேராசிரியர் வழக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் பாடப்​புத்​தகத்​தில், அண்மை தீர்ப்​பு​கள் குடிசை​வாழ் மக்​களை ஆக்​கிரமிப்​பாளர்​களாக பார்ப்​ப​தாக குறிப்​பிட்​டுள்​ளதை எதிர்த்து உச்​சநீ​தி​மன்​றத்​தில் என்​சிஆர்​டி​யின் முன்​னாள் பேராசிரியர் பங்​கஜ் புஷ்கர் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

நீதித்​துறை குறித்து சர்ச்​சைக்​குரிய கருத்து விவரிக்​கப்​பட்​ட​தால், என்​சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறி​வியல் புத்​தகத்​துக்கு உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​தது. இந்​நிலை​யில் அதே பாடப்​புத்​தகத்​தில், நீதி​மன்​றத்​தின் சமீபத்​திய தீர்ப்​பு​கள் குடிசை​வாழ் மக்​களை ஆக்​கிரமிப்​பாளர்​களாக பார்ப்​ப​தாக குறிப்​பிட்​டுள்​ளது என என்​சிஆர்​டி​யின் முன்​னாள் பேராசிரியர் பங்​கஜ் புஷ்கர் என்​பவர் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

          

இது மாணவர்​களுக்கு நீதித்​துறை குறித்து தவறான புரிதலை ஏற்​படுத்​தும். இப்​புத்​தகத்தை மறுஆய்வு செய்து உரிய திருத்​தம் செய்​ய​வும், எதிர்​காலத்​தில் இது​போன்ற தவறுகள் ஏற்​ப​டா​மல் இருக்க நடவடிக்கை எடுக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் என்​றும் பங்​கஜ் புஷ்கர்​ கூறி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT