முன்னாள் எம்.பி.இம்தியாஸ் ஜலீல்

 
இந்தியா

டிசிஎஸ் பாலியல் வழக்கு: முன்னாள் எம்.பி. பெயர் சேர்ப்பு

செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் கிளையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அங்கிருந்த சில அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பான வழக்குகளில் நீடா கான், டேனிஷ் ஷேக் உள்ளிட்ட பல ஊழியர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் 9 எப்ஐஆர் அடிப்படையில் நாசிக் நீதிமன்றத்தில் கடந்த மே 22ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில், தற்போது சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தில் இருக்கும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் முன்னாள் எம்.பி.இம்தியாஸ் ஜலீல் பெயர் இடம் பெற்றுள்ளது.

டிசிஎஸ் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நீடா கான் தலைமறைவாக இருந்தபோது அவருக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஏஐஎம்ஐஎம் கவுன்சிலர் மதீன் படேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போது அவரிடம் நீடா கானின் இருப்பிடம் குறித்து விசாரிக்கப்பட்டது. இதற்கு அவர், “நீடா முன்னாள் எம்.பி.இம்தியாஸ் ஜலீல்கானின் இருப்பிடம் குறித்து நீங்கள் இம்தியாஸ் ஜலீலிடம் தான் கேட்க வேண்டும்’’ என்று பலமுறை கூறியுள்ளார். இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு இம்தியாஸ் ஜலீலுக்கு் போலீஸார் சம்மன் அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT