திருவனந்தபுரம்: ரூ.30 கோடி முதல் பரிசு கொண்ட ஓணம் பம்பர் லாட்டரியை கேரள முதல்வர் வி.டி.சதீசன் நேற்று தொடங்கி வைத்தார்.
இது குறித்து முதல்வர் வி.டி.சதீசன் தனது முகநூல் பதிவில், “லாட்டரி வரலாற்றில் மிக அதிக முதல் பரிசு இதுவாகும். இந்த லாட்டரி சீட்டுகள் ஜூலை 20 முதல் விற்பனைக்கு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஓணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்பட்டது. இது இந்த ஆண்டு ரூ.30 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும் வழங்கப்பட உள்ளது. லாட்டரி சீட்டின் விலை ரூ.500 செப்டம்பர் 26ல் குலுக்கல் நடைபெறும்.