வினாத்தாள் கசிவுகளின் மையப் புள்ளியாக மாறிய உத்தராகண்ட் மாநிலம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Updated on
1 min read

புதுடெல்லி: உத்​த​ராகண்ட் மாநிலம் வினாத்​தாள் கசிவு​களின் மைய​மாக மாறி​விட்​டதாகவும் இளைஞர்களின் எதிர்காலத்தை ஏலம் விட அனுமதிக்க மாட்டோம் என்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்​றம்சாட்​டி​யுள்​ளார்.

உத்​த​ராகண்ட் தலைநகர் டேராடூனில் இன்று நடை​பெறவுள்ள மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடல் கூட்​டத்​திற்கு முன்​ன​தாக, நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: ”தேவபூமி​யான உத்​த​ராகண்ட் மாநிலம் தற்​போது வினாத்தாள் கசிவு​களின் மையப்​ புள்​ளி​யாக மாறி​யுள்​ளது. இங்​குள்ள துணைப் பணி​யாளர்​கள் தேர்வு வாரி​யத்​தின் தேர்​வு​களில் ஒரு முறைகேடான ‘அமைப்​பு' வேரூன்​றி​யுள்​ளது.

இதன் காரண​மாக, பட்​வாரி அல்​லது லேக்​பால் போன்ற அரசுப் பணி​யிடங்​கள் தகு​தி​யின் அடிப்​படை​யில் நிரப்​பப்​ப​டா​மல், முறை​கேட்​டில் ஈடு​படு​பவர்​களால் நிர்​ண​யிக்​கப்​படும் விலைக்கு விற்கப்​படு​கின்​றன. முறை​கேடு​களுக்கு எதி​ராக மத்​திய அரசு கடுமை​யான சட்​டத்​தைக் கொண்டு வந்த போதி​லும், வினாத்தாள் கசிவு​கள் தொடர்ந்து கொண்டே இருக்​கின்​றன. சட்டம் வெறும் காகித அளவில் மட்​டுமே உள்​ளது. ஆனால் வினாத்தாள்கள் சந்​தை​யில் தடை​யின்றி விற்​கப்​படு​கின்​றன.

ஆண்​டுக் கணக்​கில் படித்​து, கட்​ட​ணம் செலுத்​தி, தொலை​தூரத் தேர்வு மையங்​களுக்​குச் சென்று ஒரு மாணவர் தேர்வு எழுதுகிறார். ஆனால், அவருக்​கான அரசு வேலை வேறு ஒரு​வ​ரால் விலைக்கு வாங்​கப்​படு​கிறது. இது வெறும் வினாத்​தாள் கசிவு அல்ல, அந்த இளைஞனின் உரிமை, வாழ்​வா​தா​ரம் மற்​றும் எதிர்​காலத்​தைப் பறிக்​கும் திருட்டு ஆகும்.

உத்​த​ராகண்​டின் ஒவ்​வொரு மாணவருக்​கும், இளைஞருக்​கும் நான் கூறிக்கொள்​வது ஒன்றே ஒன்​று​தான். இது உங்​கள் போராட்டம், இதில் நான் உங்​களு​டன் நிற்​கிறேன். டேராடூனில் இன்று நடை​பெறும் கூட்​டத்​தில் பங்​கேற்று ‘மாணவர்​களின் குரலை' ஒரு பேரொலி​யாக மாற்​று​வோம். இளைஞர்​களின் எதிர்காலத்தை ஏலம் விட​வும், அவர்​களின் கனவு​களைச் சிதைக்கவும் நாங்​கள் ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம்​. இவ்வாறு ராகுல்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>ராகுல் காந்தி</em></p></div>
உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in