இந்தியா

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேற்கு வங்கத்தில் ‘எஸ்​ஐஆர்’ முதல் கட்ட பட்டியல் வெளியீடு: 7 லட்சம் வாக்காளர் நீக்கம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றம் நிர்​ண​யித்த காலக் கெடு​வின்​படி, மேற்கு வங்​கத்​தின் சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) செயல்​முறைக்​குப் பிந்​தைய முதல்​கட்ட வாக்​காளர் பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் நேற்று வெளி​யிட்​டது.

அதே​நேரம் அந்த பட்​டியலை தேர்​தல் ஆணை​யம் இது​வரை இணை​யதளத்​தில் அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட​வில்​லை. எனினும், கடந்த டிசம்​பரில் வெளி​யிடப்​பட்ட வரைவுப் பட்​டியலின்​படி மாநிலத்​தில் இருந்த 7.08 கோடி வாக்​காளர்​களில், இது​வரை சுமார் 7 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், மேலும் 60 லட்​சத்து 60,475 பேரின் பெயர்​கள் ஆய்​வில் இருப்​ப​தாக​வும் தகவல்​கள் தெரிவிக்​கின்​றன.

          

வரைவுப் பட்​டியலுக்​குப் பிறகு, தர்க்க ரீதி​யான முரண்​பாடு என குறிக்​கப்​பட்ட இந்த 60 லட்​சம் பேரின் பெயர்​கள் இன்​னும் சரி​பார்ப்​புக்​காக நிலு​வை​யில் உள்​ளன. கடந்த டிசம்​பரில் வெளி​யிடப்​பட்ட வரைவுப் பட்​டியலில், 58 லட்​சத்​துக்​கும் அதி​க​மான வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. எஸ்​ஐஆர் செயல் முறை முடிவடை​யும்போது, நீக்​கப்​பட்ட வாக்​காளர்​களின் எண்​ணிக்கை தற்​போதுள்​ளதை விட அதி​க​மாக இருக்​கும் என்று தேர்​தல் ஆணைய வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

இதுகுறித்து பாரக்​பூர் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​.பி. பார்த்தா போமிக் நேற்று கூறும்​போது, ‘‘முழு​மை​யான பட்​டியலை நாங்​கள் இன்​னும் பார்க்​க​வில்​லை. நைஹாத்​தி​யில் [வடக்கு 24-பர்​கா​னாஸ்] கிடைத்த தகவலின்​படி, உண்​மை​யான வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. 7 மருத்​து​வர்​கள், ரயில்வே ஊழியர்​கள் மற்​றும் சிலரின் பெயர்​கள் விடு​பட்​டிருக்​கிறது. இன்​னும் பலர் இருப்​பார்​கள்’’ என்​றார்.

தேர்​தல் ஆணை​யம் விளக்​கம்: இறப்​பு, இடமாற்​றம், இரட்​டைப் பதிவு​கள் மற்​றும் முகவரி கண்​டறிய முடி​யாத காரணங்​களால் மட்​டுமே பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், முறை​யான ஆவண சரி​பார்ப்​புக்​குப் பிறகே புதிய பெயர்​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக​வும் தேர்​தல்​ ஆணை​ய அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT