இந்தியா

மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் கிராமத்துக்கு வருகை தந்த முதல் ஆட்சியர்

செய்திப்பிரிவு

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் நாராயண்​பூர் மாவட்​டத்தின் தொலை​தூர ‘ரே​காவ​யா' கிராமம் ஒரு காலத்​தில் மாவோ​யிஸ்ட்​களின் ஆதிக்​கம் நிறைந்​திருந்ததாக இருந்தது.

இந்த கிராமம் தற்​போது பொது நீரோட்​டத்​தில் இணைந்து வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த கிராமத்​துக்கு நாராயண்​பூர் மாவட்ட ஆட்​சி​யர் நம்​ரதா ஜெயின் நேற்று வருகை தந்​தார்.

          

இதன்​மூலம் அந்க கிராமத்​துக்கு வருகை தந்த முதல் மாவட்ட ஆட்​சி​யர் என்ற வரலாற்​றுச் சாதனையை அவர் படைத்​தார். அவருக்கு பழங்​குடி​யின மக்​கள் தங்​கள் பாரம்​பரிய கலாச்​சா​ரத்​தைப் பின்​பற்றி மஹுவா மலர் மாலை அணி​வித்து உற்​சாக வரவேற்பு அளித்​தனர். கோண்டி மொழி​யில் பாடல்​கள் பாடி தங்​கள் மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர்.

இதையடுத்து அப்​பகு​தி​யில் புதிய பள்​ளிக் கட்​டிடத்தை ஆட்​சி​யர் திறந்து வைத்​தார். குழந்​தைகளு​டன் அமர்ந்து அவர்​களின் கல்வி மற்​றும் எதிர்​கால லட்​சி​யங்​கள் குறித்து கேட்​டறிந்​தார். குழந்​தைகளுக்கு விளை​யாட்டு உபகரணங்​கள், புத்​தகங்​களை வழங்​கினார். இதையடுத்து சாலை வசதி, செல்​போன் தொடர்​பு, ரேஷன் விநி​யோகம் உள்​ளிட்ட கோரிக்​கைகளை ஆட்​சி​யரிடம் கிராம மக்​கள் முன்​வைத்​தனர்.

SCROLL FOR NEXT