இந்தியா

முதல் புல்லட் ரயில் 2027-ல் இயக்கப்படும்: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

சூரத் - வாபி இடையே முதற்கட்ட சேவை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யாவின் முதல் புல்​லட் ரயில் சேவை அடுத்​தாண்டு இயக்​கப்​படும் என்​று மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ் தெரி​வித்​துள்​ளார்.

உலக நாடுகளுக்கு இணை​யாக, இந்​தி​யாவிலும் புல்​லட் ரயில்​கள் இயக்​கப்​படும் என, மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு கடந்த 2017-ம் ஆண்டு அறி​வித்​தது. கடந்த 2021-ம் ஆண்டு இத்​திட்​டத்​துக்​கான கட்​டு​மானப் பணிகள் முழு​வீச்​சில் தொடங்​கின. இந்​தி​யாவின் முதல் புல்​லட் ரயில் திட்​டம் மும்பை - அகமதாபாத் இடையே சுமார் 508 கி.மீ. தூரத்​துக்கு அமைக்​கப்​பட்டு வரு​கிறது.

இது​குறித்து மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்வினி வைஷ்​ணவ் கூறியிருப்ப​தாவது:

நாட்​டின் முதல் புல்​லட் ரயிலை இயக்​கு​வதற்​கான பணிகள் முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த செப்​டம்​பர் மாத நில​வரப்​படி, 456 கி.மீ. நீளத்​துக்கு தூண்​கள் அமைக்​கும் பணி​யும், 371 கி.மீ. நீளத்​துக்கு உயர்​மட்ட மேம்​பாலப் பாதை அமைக்​கும் பணி​யும் நிறைவடைந்​துள்​ளன. 299 கி.மீ. நீளத்​துக்கு 6 லட்​சம் ஒலி தடுப்​புச் சுவர்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. 206 கி.மீ. நீளமுள்ள மேம்​பாலப் பாதையில் 9,300 மின்​சார மேல்​நிலை கம்​பங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

நாட்​டின் முதல் புல்​லட் ரயில் சேவை அடுத்​தாண்டு இயக்​கப்​படும். முதற்​கட்​ட​மாக சூரத் – வாபி இடையே தொடங்​கப்​படும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT