இந்தியா

பஞ்சாபில் ரயிலில் தீ விபத்து: 3 பெட்டிகள் எரிந்து சேதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பஞ்சாபில் கர்மபூமி விரைவு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில், 3 பெட்டிகள் எரிந்து சேதம் அடைந்தன. பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் இருந்து மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரிக்கு இயக்கப்படும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள சராய் பஞ்சாரா என்ற இடம் அருகே சென்ற போது, திடீரென ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 3 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

அரசு ரயில்வே காவல் ஆய்வாளர் குர்பிரீத் சிங் கூறுகையில், ‘‘ரயில் பெட்டியில் இருந்த மின்விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம்’’ என்றார். ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவசரகால மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் இதுவரை உயிரிழப்போ அல்லது காயமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT