இந்தியா

வழக்குகளை விரைந்து விசாரிக்க முறையிடுபவர்களுக்கு அபராதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார்.

நேற்றைய வழக்கு விசாரணையின்போது, அவசரமாக விசாரிக்க கோரி முறையிட்ட வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி, முக்கியம் இல்லாத வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரி முறையிடுவது தெரியவந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் .

அபராதம் 50 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்படும். இவ்வாறு வசூலிக்கப்படும் அபராத தொகை இளம் வழக்கறிஞர்களுக்கான பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT