இந்தியா

மறைந்த ராணுவ வீரரின் மகள் திருமணம்: குடும்பமாக வந்து சீர்வரிசை வழங்கிய சக வீரர்கள்

செய்திப்பிரிவு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மறைந்த ராணுவ வீரரின் மகள் திரு​மணத்​தில், தந்தை இல்​லாத குறையைப் போக்​கும் விதத்​தில் உடன் பணி​யாற்​றிய சக வீரர்​கள், அதி​காரி​கள் குடும்​பத்​துடன் பங்​கேற்று சீர்​வரிசை வழங்​கியது நெகிழ்ச்​சியை ஏற்​படுத்தி உள்​ளது.

ராஜஸ்​தான் மாநிலம், ஆல்​வார் மாவட்​டத்​தில் உள்ள ஹர்​சோலி கிராமத்​தில் வசித்து வரும் ப்​ரீத்தி என்​பவரது திரு​மணம் கடந்த சனிக்​கிழமை நடை​பெற்​றது. அவரது தந்​தையான ஹவில்​தார் பப்​பல் சிங் ராணுவத்​தில் பணி​யின்​போது உயி​ரிழந்​ததால், தனது திரு​மணத்​தின்​போது தந்தை அரு​கில் இல்​லாத குறையை ப்​ரீத்தி உணர்ந்​தார்.

ஆனால், அந்​தக் குறையை போக்​கும் வகை​யில், அவரது தந்தை பணி​யாற்​றிய 16-வது ஜாட் படைப்​பி​ரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்​கள் ஒன்​றிணைந்து திரு​மணத்​தில் பங்​கேற்​றனர். தந்தை இல்​லாததால் குடும்​பத்​துக்கு ஏற்​பட்​டிருந்த குறையை ஓரளவுக்​குப் போக்​கும் வகை​யில் அவர்​கள் உறுதுணை​யாக இருந்​தனர்.

இந்​தத் திரு​மண விழா​வில் படைப்​பி​ரி​வின் அதி​காரி​கள், இளநிலை அதி​காரி​கள் மற்​றும் ராணுவ வீரர்​கள் கலந்து கொண்​டனர். மேலும், திரு​மணச் செல​வு​களுக்​காக ரூ.1.61 லட்​சம் நிதி​யுத​வியும் வழங்​கினர்.

ராணுவ வீரர்​களின் இந்த நெகிழ்ச்​சி​யான செயல், ப்​ரீத்​தி​யின் குடும்​பத்​தினரை மட்​டுமின்றி, கிராம மக்​கள், உறவினர்​கள் மற்​றும் மணமகன் வீட்​டாரை​யும் நெகிழ்ச்​சி​யடையச் செய்​தது. ராணுவப் படைப்​பி​ரி​வின் ஆதரவையும் அன்​பையும் அனைவரும் பாராட்​டினர்.

‘சேவா பரமோ தர்மா’ (பிறருக்​குச் சேவை செய்​வதே உயர்ந்த அறம்) என்ற கொள்​கைக்கு இந்த ராணுவ வீரர்​களின் செயல் சிறந்த எடுத்​துக்​காட்​டாக அமைந்​துள்​ளது. ஒரு ராணுவ வீரர் மறைந்​தா​லும், அவருக்​கும், அவரது சக வீரர்​களுக்​கும் இடை​யி​லான பந்​தமும், அவரது குடும்​பத்​தின் மீதான பொறுப்​பும் ஒருபோதும் முடிவதில்லை என்​பதை இந்​தச் சம்​பவம் உணர்த்​தி​யுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT