இந்தியா

ஆயுதம் துறந்து மாவோயிஸ்ட் மகன் சரணடைய தந்தை உருக்கமான அழைப்பு

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர மாநிலம் காட்​சிரோலி மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் ஜெய​ராம் (எ) நந்து மோங்கே காவடே. இவருக்கு 17 வயதாக இருக்​கும் போது குடும்பச் சண்​டை​யின் காரண​மாக காவடேவை, அவரது தந்தை மோங்கே காவடே திட்​டி​விட்​டார். இதனால் கோபம் கொண்டு வீட்டை விட்​டுச் சென்ற ஜெய​ராம் மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் சேர்ந்​து​விட்​ட​தாகத் தெரிய​வந்​தது.

சுமார் 14 ஆண்​டு​களாக அவர் மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் செயல்​பட்டு வரு​கிறார். இந்​நிலை​யில் அவரது தந்தை மோங்கே காவடே உருக்​க​மாக வீடியோ மூலம் அழைப்பு விடுத்​துள்​ளார். அதில் மோங்கே காவடே கூறும்​போது, “நாடு முழு​வதும் மாவோ​யிஸ்ட் இயக்​கத்​தில் இருந்​து, நக்​சல்​கள் வெளி​யேறி நாட்டு பொது வாழ்க்​கை​யில் ஈடு​படு​கின்​றனர். நீயும் ஆயுதங்​களைப் போட்​டு​விட்டு போலீ​ஸாரிடம் சரணடைய வேண்டும்.

          

உன்​னுடைய குழு​வில் தற்​போது 6 பேர் மட்​டுமே உள்​ளனர். நீ வீட்​டுக்​குத் திரும்பி உனது மக்​களு​டன் மக்​களாக வாழ​ வேண்​டும். இப்​போது, உன்​னுடைய மாவோ​யிஸ்ட் குழு​வில் இருந்த உங்​கள் மூத்த தோழர்​கள் மற்​றும் தலை​வர்​கள் அனை​வரும் வெளியே சென்​று​விட்​டனர். ஏன் நீ மட்​டும் காட்​டில் தனி​யாக இத்​தகைய இன்​னல்​களைத் தாங்​கிக்​கொண்டு இருக்​கிறாய்? நீ உடனடி​யாக கிராமத்​துக்​குத் திரும்​ப வேண்​டும். இவ்​வாறு அவர் உருக்​க​மாக கூறி​யுள்​ளார்.

காட்​சிரோலி மாவட்​டத்​தி​லுள்ள மாவோ​யிஸ்ட் குழு​வில் ஜெய​ராம் உட்பட 6 பேர் மட்​டுமே மீதம் உள்​ளனர். அவர்​கள் ஆயுதங்​களைப் போட்​டு​விட்டு சரண் அடைந்​தால் அவர்​கள் மறு​வாழ்​வுக்​குத் தேவை​யான திட்​டங்​களை மத்​திய அரசு வழங்​கும் என்று மகா​ராஷ்டிர போலீ​ஸார் அறி​விப்பு வெளி​யிட்​டுள்​ளனர். இந்​நிலை​யில் கடந்த மார்ச் 31-ம் தேதி​யுடன் நக்​சல்​கள் இல்​லாத மாநில​மாக மகா​ராஷ்டி​ராவை மத்​தி​ய அரசு அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT