கம்மம்: தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம், லச்சாபுரத்தில் உள்ள ஏரிக்கரையில், நேற்று அதிகாலை 500 ரூபாய் நோட்டுகள் நாலா புறமும் சிதறி கிடந்தன. இதனை பார்த்த அப்பகுதியினர் ஆச்சரியப்பட்டனர்.
இது குறித்து லச்சாபுரம் போலீஸாருக்கு தகவல் எட்டியது. உடனே போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு சிதறி கிடந்த சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகளை சேகரித்து சோதித்து பார்த்தனர். அப்போது அவை அனைத்துமே கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. யாரோ கள்ள நோட்டுகளை மாற்ற பயந்து, இங்குள்ள ஏரிக்கரையில் வீசி விட்டு சென்றுள்ளனர் என போலீஸார் கருதுகின்றனர். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.