காசியாபாத்: காசியாபாத்தில் உள்ள ஒரு காவல் சாவடியில் வெடி விபத்து ஏற்பட்டதில் டெலிவரி ஊழியர் காயமடைந்தார்.
உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தின் வசுந்தரா காவல் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் திடீரென வெடி சத்தம் கேட்டது.
இந்த விபத்தால் காவல் சாவடி சேதமடைந்தன. 2 கண்ணாடிகள் உடைந்ததுடன் ஒரு சுவரில் விரிசலும் ஏற்பட்டது. இதுகுறித்து காசியாபாத் துணை ஆணையர் ரிஜுல் குமார் கூறும்போது, “வெடி விபத்து காரணமாக காவல் சாவடியின் 2 ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து, விரிசல் ஏற்பட்டது.
அப்போது அங்கு போலீஸார் இருந்தனர், ஆனால் அவர்களுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. ஒரு பொருளை வழங்க வந்த டெலிவரி ஊழியர் மீது கண்ணாடித் துண்டு தாக்கியதில் தலைப் பகுதியில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் இப்போது நலமாக உள்ளார்” என்றார்.
இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, தடை செய்யப்பட்ட அமைப்பான ‘தெஹ்ரீக்-உல் முஜாகிதீன் ஹிந்துஸ்தான்’ அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
இந்த சமபவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் வெடிமருந்துகள், வெடிபொருட்கள் அல்லது அதுபோன்ற வேறு எந்தப் பொருட்களின் தடயங்களும் கண்டெடுக்கப்படவில்லை” என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.