இந்தியா

தேர்தல் ஆணைய செயல்பாடுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யத்​தின் செயல்​பாடுகள், முடிவெடுக்​கும் நடைமுறைகள், வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணிகள் ஆகிய​வற்றை ஆய்வு செய்ய, உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி அல்​லது உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி தலை​மையில் நிபுணர் குழுவை அமைக்​கக் கோரி உச்​சநீதி​மன்​றத்​தில் பொதுநல மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

வழக்​கறிஞர் விஷால் திவாரி தாக்​கல் செய்​துள்ள இந்த மனுவில், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தலை​மையி​லான ஆணை​யத்​தின் செயல்​பாடுகளில் உள்​ள​தாகக் கூறப்​படும் குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த வேண்​டும் எனக் கோரப்​பட்​டுள்​ளது.

தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் எடுத்த முடிவு​களுக்கு எதிராக, மற்ற இரு தேர்​தல் ஆணை​யர்​களான சுக்​பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்​களில் குறைந்​தது 14 முறை எழுத்​துப்​பூர்​வ​மாக ஆட்​சேபனை தெரி​வித்​த​தாக ஊடகங்​களில் வெளியான தகவல்​களை​யும் மனுதா​ரர் சுட்​டிக்​காட்​டியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT