இந்தியா

குற்றவாளி விடுவிக்கப்பட்டாலும் இழப்பீடு வழங்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கொலை வழக்​கி​லிருந்து குற்றவாளி விடுவிக்கப்பட்டாலும், கொலை செய்​யப்​பட்​ட​வரின் குடும்பத்துக்கு இழப்​பீடு வழங்​கு​வது தொடர்​பான திட்​டங்​களை வகுக்க மத்​திய, மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்​ளது.

ஹரியானா மாநிலம், பிவானி மாவட்​டத்​தில் கடந்த 2011-ல் சகுந்தலா, சுமன் என்ற இரு பெண்​கள் குடும்ப உறுப்​பினர்​களான நரேஷ் மற்​றும் சுபாஷ் என்​பவர்​களால் பொது இடத்​தில் வைத்து அடித்​துக் கொல்​லப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இந்​தக் கொலை வழக்கில், கடந்த 2013-ல், பிவானி​யில் உள்ள விரைவு நீதி​மன்​றம் நரேஷுக்கு மரண தண்​டனை விதித்து தீர்ப்​பளித்​தது.

உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப்​பட்​டது, மனுவை நீதிப​தி​கள் சதீஷ் சந்​திர சர்மா, கோடீஸ்​வர் சிங் விசா​ரித்​தனர். நரேஷை நீதிமன்றம் விடுவித்​தது. அதேவேளை​யில், கொல்லப்பட்ட பெண்​களின் குடும்​பங்​களுக்கு நிதி​யுதவி வழங்க முடியுமா? என்​பதை ஆராய​வும் நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

குறிப்​பாக, “வழக்​கில் போது​மான ஆதா​ரங்​கள் இல்​லாததால் குற்றம் சாட்​டப்​பட்​ட​வர்​கள் விடுவிக்​கப்​பட்​டாலும், குற்​றத்​தால் பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் குடும்​பத்​தினருக்​கும் இழப்​பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்​கப்​பட வேண்​டும். மாநில அரசுகள் மத்​திய அரசுடன் ஒருங்​கிணைந்து, இழப்​பீடு திட்​டங்​களைத் தயாரிக்க வேண்​டும்” என்​றும் அறி​வுறுத்​தினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT