இந்தியா

“இன்ஸ்டா கணக்குகளை முடக்கினாலும் மக்களின் கேள்விகள் மறையாது” - சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய அரசு உத்​தர​வின் பேரில் இன்ஸ்டாகிராம் கணக்​கு​களும் பதிவு​களும் தொடர்ந்து முடக்​கப்​பட்டு வரு​வ​தாக கரப்​பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறு​வனர் அபிஜித் திப்கே குற்​றம்​சாட்​டியுள்​ளார்.

அதேநேரம், சமூக வலை​தளக் கணக்​கு​களை முடக்​கு​வ​தால் மக்​களின் கேள்​வி​கள் மறைந்​து​விடாது என்​றும், இளைஞர் வேலை​வாய்ப்​பின்மை, ஆட்சி நிர்​வாகக் கோளாறுகள் மற்​றும் பொது உள் கட்​டமைப்பு சார்ந்த பிரச்​சினைகளுக்​குத் தணிக்கை ஒருபோதும் தீர்​வாகாது என்​றும் அவர் தெரி​வித்​துள்​ளார்.

இளைஞர்​களின் வேலை​வாய்ப்​பின்மை மற்​றும் நிர்​வாகப் பிரச்சினைகள் குறித்​துக் கேள்வி எழுப்​பும் இன்ஸ்டாகிராம் கணக்கு​களைக் கட்​டுப்​படுத்​து​மாறு தகவல் தொழில்​நுட்​பச் சட்டத்​தின் பிரிவு 69A-ன் கீழ் மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ள​தாகத் தகவல்​கள் தெரி​விக்​கின்​றன. இத்​தகைய கணக்கு முடக்​கங்​கள் குறித்து செயற்​பாட்​டாளர்​களும் அரசி​யல் அமைப்​பு​களும் கடும் கவலை தெரி​வித்​துள்​ளன.

இதனிடையே, மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களுக்​குப் பதிலாக மீண்​டும் வாக்​குச்​சீட்டு முறையைக் கொண்​டுவர வலியுறுத்தி ‘இவிஎம்-ஐ அகற்று, தேசத்​தைக் காப்​பாற்று’ என்ற முழக்​கத்​துடன் ‘மிஷன் சேவ் கான்ஸ்டி​டியூஷன்’ அமைப்பு செயல்பட்டு வரு​கிறது. இவ்​வ​மைப்​பின் ஒருங்​கிணைப்​பாளர் வழக்கறிஞர் மெஹ்​மூத் பிராச்​சாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT