இந்தியா

பஞ்​சாப் உட்பட 3 மாநிலத்தில் அமலாக்கத் துறை சோதனை

செய்திப்பிரிவு

சண்டிகர்: இந்​தி​யர்​களை சட்​ட​விரோத​மாக அமெரிக்கா​வுக்கு அனுப்​பியது தொடர்​பான கழுதைப் பாதை வழக்​கில், நடை​பெற்ற சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை குறித்து பஞ்​சாப், ஹரி​யானா மற்​றும் டெல்​லி​யில் அமலாக்​கத் துறை நேற்று மீண்​டும் சோதனை​களை நடத்​தி​யது.

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக வசித்த 1,500-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​களை அமெரிக்க அரசு இந்த ஆண்டு நாடு கடத்​தி​யது. இவர்​களில் பலர் கழுதைப் பாதை எனப்​படும் நீண்ட மற்​றும் கடின​மான பயணம் மூலம் அமெரிக்​கா​வில் நுழைந்​தவர்​கள் எனத் தெரிய​வந்​தது.

இந்த சட்​ட​விரோத நடவடிக்​கைக்கு பின்​னால் இருந்த குற்​ற​வாளி​கள் சிலரை அமலாக்​கத் துறை அடை​யாளம் கண்ட பிறகு கடந்த ஜூலை​யில் முதல்​சுற்று சோதனை நடத்​தி​யது. சமீபத்​தில் பயண முகவர்​கள் சிலரின் ரூ.5 கோடி மதிப்​புள்ள சொத்​துகளை முடக்கியது.

இந்​நிலை​யில் இந்த சங்​கி​லித்​தொடரில் இரண்​டாவது மற்​றும் மூன்​றாவது நிலையில் இருக்​கலாம் என சந்​தேகிக்​கப்​படும் நிறுவனங்​கள் மற்​றும் தனி நபர்​களுக்கு சொந்​த​மான இடங்​களில் நேற்று சோதனை நடை​பெற்​றது. பஞ்​சாபின் ஜலந்​தரில் உள்ள ஒரு பயண நிறு​வனம், டெல்லி மற்​றும் பானிபட்​டில் (ஹரி​யா​னா) உள்ள சிலரின் இடங்​களி​லும் சோதனை நடை​பெற்​றது.

கடந்த பிப்​ர​வரி​யில் அமெரிக்க அரசால் 330 இந்​தி​யர்​கள் ராணுவ சரக்கு விமானங்​களில் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்ட சம்​பவம் தொடர்​பாக பஞ்​சாப் மற்​றும் ஹரி​யானா காவல்​துறை​யால் பதிவு செய்​யப்​பட்ட முதல் தகவல் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை இந்த விசா​ரணையை தொடங்​கியது.

SCROLL FOR NEXT