இந்தியா

மின் திருத்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவை​யில் நேற்று மத்​திய மின்​சா​ரத்​துறை இணை அமைச்​சர் ஸ்ரீ​பாத நாயக் கூறிய​தாவது:

மின்​சார சட்​டத் திருத்த மசோ​தாவை மத்​திய அரசு தயாரித்துள்ளது. மின்​சா​ரத்தை விநி​யோகிக்​கும் பணி​யில் மின்சார உற்​பத்தி நிறு​வனங்​கள் மிக​வும் முக்​கியக் காரணி​யாக உள்​ளன. இந்த நிறு​வனங்​கள்​தான், மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்வது, கொண்​டு ​செல்​வது, விநி​யோகிப்​பது ஆகிய பணிகளைச் செய்​கின்​றன.

          

இந்த நிறு​வனங்​களுக்கு ஏற்​படும் நஷ்டத்தை குறைக்​கும் வகையில், செலவை பிர​திபலிக்​கும் கட்​ட​ணத்தை நிர்​ண​யிக்​கும் விதியை மத்​திய அரசு கொண்டு வரவுள்​ளது. புதிய கட்டணமானது, மின்​சார விநி​யோகத்​தில் உள்ள அனைத்​துச் செல​வு​களை​யும் பிர​திபலிக்​கும். இதுதொ​டா்​பான மசோ​தா, நடப்பு பட்​ஜெட் கூட்​டத் தொடரில் நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​படும் என்று நான் நம்​பு​கிறேன்.

மசோ​தாவை சுமுக​மாக நிறைவேற்​று​வதற்கு ஒரு​மித்த கருத்தை ஏற்​படுத்​தும் முயற்​சி​யில் மத்​திய அரசு ஈடு​பட்​டுள்​ளது. இந்த மசோ​தா​வில் செல​வினங்​களை பிர​திபலிக்​கும் கட்​ட​ணங்​கள், மின் விநி​யோக நிறு​வனங்​கள் தாமே மின்​சா​ரக் கட்​ட​ணத்தை நிர்ண​யிக்க வகை செய்​யும் அம்​சங்​கள், மின்​சா​ரக் கட்​ட​ணத்தை ஒழுங்​குபடுத்​து​வதற்​கான அமைப்​பு​கள் ஆகியவை குறி்த்த ஷரத்​துகள் இடம்​பெற்​றுள்​ளன. இவ்வாறு அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறினார்.

SCROLL FOR NEXT