இந்தியா

கேரளத்தில் முதல் முறை வாக்காளர்களை கவர அல்வா வழங்கும் தேர்தல் ஆணையம்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளத்​தில் முதல்​முறை வாக்​காளர்​களை கவர அல்வா வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் புது​மை​யான முயற்​சி​யால் முதல்​முறை வாக்​காளர்​கள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர்.

கேரளத்​தில் வரும் 9-ம் தேதி சட்​டப் பேர​வைத் தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் முதல்​முறை​யாக வாக்​களிக்க உள்ள இளம் வாக்​காளர்​களை கவர அவர்​களுக்கு அல்வா வழங்​கும் திட்​டத்தை தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​துள்​ளது. கேரள தலை​மைத் தேர்​தல் அதி​காரி ரத்​தன் யு. கேல்​கர் இதற்​கான அறி​விப்பை சில தினங்​களுக்கு முன்பு வெளி​யிட்​டார்.

          

இதன்​படி கேரளத்​தில் உள்ள அனைத்து வாக்​குச்​சாவடிகளுக்​கும் அல்வா பாக்​கெட்​டு​கள் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளன. அந்த வாக்​குச்​சாவடி​யில் வாக்​களிக்க வரும் முதல்​முறை வாக்​காளர்​களுக்கு அல்வா பாக்​கெட்​களை வழங்கி அவர்​களை உற்​சாகப்​படுத்​து​மாறு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

முதல்​முறை வாக்​காளர்​கள் யார் என்​பதை மாவட்ட தேர்​தல் அதி​காரி​யும்​(டிஇஓ), வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​களும்​(பிஎல்ஓ) கண்​டறிந்து இதற்​கான பணி​களில் ஈடு​பட​வுள்​ளனர்.

இதற்​காக கூடு​தல் தன்​னார்​வலர்​களை​யும் நியமிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தின் புது​மை​யான முயற்​சி​யால் முதல்​முறை வாக்​காளர்​கள்​ மகிழ்ச்​சி அடைந்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT