இந்தியா

எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், எஸ்​ஐஆா் பணி​களை மேற்​கொள்ளும் தேர்​தல் ஆணை​யத்​தின் அதி​காரத்தை எதிர்த்து ஏடிஆர், பியுசிஎல் உள்ளிட்ட அமைப்​பு​களும், ராஷ்ட்​ரீய ஜனதா தளம், திரிண​மூல் காங்​கிரஸ், திமுக, விசிக உள்​ளிட்ட அரசி​யல் கட்​சிகள் சார்​பிலும் தாக்​கல் செய்த மனுக்​களை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய​காந்த் தலை​மையி​லான அமர்வு விசா​ரித்து மனுக்​கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் கடந்த ஜனவரி 29-ம் தேதி ஒத்தி வைத்​தது.

இந்​நிலை​யில், அம்​மனுக்​கள் மீதான தீர்ப்பை உச்ச நீதி​மன்​றம் நேற்று வழங்​கியது. அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: 40 ஆண்டுகளுக்கும் மேலாக வாக்​காளர் பட்​டியல் திருத்​தம் செய்யப்ப​டாத நிலை உள்​ளது. வேக​மான நகரமய​மாக்​கலில் வாக்காளரின் புலம்​பெயர்வும், வாக்​காளர் பெயர் சேர்ப்​பு, நீக்​கம் உள்​ளிட்ட காரணத்​தால் வாக்​காளர் பட்​டியலில் பெயர்​கள் ஒன்றுக்​கும் மேற்​பட்ட தொகுதியில் இடம்​பெறுகின்​றன.

இது​போன்ற காரணங்​களால் ஏற்​படும் துல்​லி​யத்​தன்மை பாதிப்பைத் தடுக்​கவே எஸ்​ஐஆா் பணி அவசி​ய​மாகிறது என்ற வாதம் ஏற்​கும்​படி உள்​ளது. ஜனநாயக முறை​யின் நம்​பகத்​தன்மையே வாக்​காளர் பட்​டியலின் துல்​லி​யத்தை சார்ந்​துள்​ளது. நியாய​மான, நேர்​மை​யான தேர்​தல் வெறும் வாக்​குப் பதிவு முறையில் மட்​டும் இல்​லை.

மாறாக, வாக்​காளர் பட்​டியலின் நம்​பகத்​தன்​மையை சார்ந்துள்ளது. எஸ்​ஐஆா் பணி​கள் நியாய​மான தேர்​தலை நடத்துவதற்கு தேவை​யான அரசமைப்பு கடமைக்கு உயிரூட்டுகிறது. எஸ்​ஐஆா் பணி​கள் மக்​கள் பிர​தி​நி​தித்​துவ சட்டத்​துடன் முரண்​பட​வில்​லை. எனவே, எஸ்​ஐஆா் பணி​களை மேற்கொள்ள தேர்​தல் ஆணை​யத்துக்கு அதிகாரம் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்​ளது.

SCROLL FOR NEXT