பழனிசாமியுடன் எஸ்.பி.வேலுமணி திடீர் சந்திப்பு: அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தன

தகுதி நீக்கம் கோரிய கடிதத்தை திரும்ப பெற நடவடிக்கை
தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து, அதிமுக சட்டமன்ற தலைவராக பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளதாக கடிதம் அளித்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை அதிமுக எம்.எல்.ஏக்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து, அதிமுக சட்டமன்ற தலைவராக பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளதாக கடிதம் அளித்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: இரு அணி​களாகப் பிரிந்து செயல்​பட்​டு​வந்த அதி​முக​வினர், ஒன்​றாக இணைந்​தனர். மேலும், தகுதி நீக்​கம் கோரி சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் அளித்த கடிதங்​களைத் திரும்​பப் பெறு​வ​தாக​வும் கடிதம் அளித்​தனர்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்​டுமே வென்று மூன்​றாம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டது. அதைத்​தொடர்ந்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் கருத்​து​வேறு​பாடு ஏற்​பட்டு சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் 25 எம்​எல்​ஏக்​கள் தனி அணி​யாகச் செயல்​பட்​டனர். மேலும், தவெக அரசின் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக​வும் வாக்​களித்​தனர்.

தகுதி நீக்கம் கோரி கடிதம்: அதைத்​தொடர்ந்​து, இரு அணி​யினரும் சட்​டப்​பேரவை அதி​முக தலை​வர், கொற​டாவைத் தேர்ந்​தெடுத்து, பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரிடம் கடிதம் அளித்​திருந்​தனர். அதே​போல், இரு அணி​யினரும் எதிரணி​யைச் சேர்ந்த எம்​எல்​ஏ.க்​களை கட்​சித் தாவல் தடை சட்​டத்​தின் கீழ் தகுதி நீக்​கம் செய்​யு​மாறும் அவரிடம் கடிதம் அளித்​தனர்.

இதற்​கிடையே, சி.​வி.சண்​முகம் அணி​யில் இருந்த மரகதம் குமர​வேல், சத்​ய​பா​மா, ஜெயக்​கு​மார், இசக்கி சுப்​பையா ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர். மேலும், ஆற்​காடு எம்​எல்ஏ சுகு​மார் உள்​ளிட்ட 6 எம்​எல்​ஏ.க்​கள், பழனி​சாமி அணிக்கு மாறி​னார். இதனால் சி.​வி.சண்​முகம் அணி​யின் பலம் 15 ஆகக் குறைந்​தது.

பழனிசாமியுடன் சந்திப்பு: இந்​நிலை​யில், சி.​வி.சண்​முகம் அணி எம்​எல்​ஏக்​களான எஸ்​.பி.வேலுமணி, சி.​விஜய​பாஸ்​கர், கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் பழனி​சாமியை சென்னை பசுமைவழிச் சாலை​யில் நேற்று சந்​தித்து சமா​தானப்பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் உடன்​பாடு எட்​டப்​பட்ட நிலை​யில், இரு அணி​யினரும் தலை​மைச் செயல​கம் புறப்​பட்​டுச் சென்​றனர். அங்கு இரு அணி​கள் சார்​பிலும், தகுதி நீக்க நடவடிக்கை கோரி பேர​வைத் தலை​வரிடம் ஏற்​கெனவே அளித்த கடிதத்தை திரும்​பப் பெறு​வ​தாக கடிதம் அளித்​தனர்.

மேலும், அதி​முக​வின் சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக பழனி​சாமி, கொற​டா​வாக அக்ரி கிருஷ்ண​மூர்த்தி ஆகியோரை தேர்ந்​தெடுத்​திருப்​ப​தாக​வும் பேர​வைத் தலை​வரிடம் கடிதம் அளித்​தனர். இந்த நிகழ்வில், சி.​வி.சண்​முகம் உடன் வரவில்​லை. அவர் அதிருப்​தி​யில் இருப்​ப​தாகத் தெரி​கிறது. அவருடன் மூத்த நிர்​வாகி​கள் மேற்​கொண்ட சமரச​மும் தோல்​வி​யில்முடிந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

பேர​வைத் தலை​வரை சந்​தித்​த​பின், செய்​தி​யாளர்​களிடம் எஸ்​.பி.வேலுமணி கூறியதாவது: அதி​முக தோல்வி அடைந்த பிறகு, சில கருத்​துகளை நாங்​கள் பழனி​சாமி​யிடம் சொன்​னோம். ஆளுங்​கட்​சிக்கு ஆதர​வான நிலை எடுத்​தோம். அதனால் 25 பேரை தகுதி நீக்​கம் செய்ய பழனி​சாமி தரப்​பில் பேர​வைத் தலை​வரிடம் மனு கொடுக்​கப்​பட்​டது. நாங்​களும் 22 பேரை தகுதி நீக்​கம் செய்ய மனு கொடுத்​திருந்​தோம்.

இந்த இரு மனுக்​களை​யும் நாங்​கள் வாபஸ் பெற்று விட்​டோம். கட்​சி​யில் பிளவு ஏற்​பட​வில்​லை. எங்​களுக்​குள் கருத்து வேறு​பாடு தான் நில​வியது. இப்​போதும், எப்​போதும் எங்​கள் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​தான். சி.​வி.சண்​முக​மும் கடிதத்​தில் கையெழுத்​திட்​டிருக்​கிறார். அவரும் எங்​களு​டன் உள்​ளார்.

கட்​சி​யின் தொடர் தோல்வி குறித்​து, பொதுக்​குழுவை கூட்டி விவா​திக்க வேண்​டும், உயர்​மட்டகுழு அமைத்து ஆராய வேண்​டும் என்று கோரிக்கை வைத்​தோம். அதை பொதுச்​செய​லா​ளர்பழனி​சாமி ஏற்​றுக்​கொண்​டார்.

பதவிக்காக செல்லவில்லை: தமிழகத்​தில் 31 ஆண்டு காலம் ஆட்​சி​யில் இருந்த கட்சி அதி​முக.நாங்​கள் பதவி கேட்டு தவெக​விடம் செல்​ல​வில்​லை. இனி ஒற்​றுமை​யாக இருந்து அதி​முக வெற்​றிக்​காகப் பாடு​படு​வோம், இவ்​வாறு அவர் கூறி​னார்.

பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர் கூறும்​போது, “அதி​முக எம்​எல்​ஏக்​கள் ஏற்​கெனவே இரு குழுக்​களாகப் பிரிந்து மனுக்​களை அளித்​தனர். நேற்று முன்​தினம் 5 பேரும், பிறகு ஒரு​வரும் மனு கொடுத்​தார்​கள். இன்​றும் ஒரு மனு அளித்​துள்​ளனர். அவற்றை படித்து பார்த்​து, ஆய்வுசெய்து முறை​யான அறி​விப்பை நாளை (இன்​று) காலை வெளி​யிடுவேன்​” என்​றார்​.

<div class="paragraphs"><p>தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரை அதிமுக எம்.எல்.ஏக்கள்&nbsp;எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேற்று சந்தித்து, அதிமுக சட்டமன்ற தலைவராக பழனிசாமியை தேர்ந்தெடுத்துள்ளதாக கடிதம் அளித்தனர். படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் அளித்த நீண்ட கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in