இந்தியா

ஷிண்​டேவுடன் சரத் பவார் திடீர் சந்திப்பு - உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்​கிரஸ் கலக்​கம்

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டிர துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டேவை, முன்​னாள் முதல்​வரும், தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சித் (சரத் பவார்) தலை​வரு​மான சரத் பவார் சந்​தித்​துப் பேசி​யுள்​ளார். இது உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, காங்​கிரஸ் கட்சிகளுக்கு கலக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மகா​ராஷ்டிர மாநில அரசி​யலில் அடுத்​தடுத்து பல்​வேறு பரபரப்பான சம்​பவங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இண்​டியா கூட்​ட​ணி​யில் உள்ள உத்​தவ் சிவசேனா அணி​யைச் சேர்ந்த 9 மக்களவை எம்​.பி.க்​களில் 6 பேர், பாஜக கூட்​ட​ணி​யில் உள்ள துணை முதல்​வர் ஏக்​நாத் ஷிண்​டே​ தலைமையிலான சிவசேனா அணியில் இணைந்தனர்.

நாடு முழு​வதும் எதிர்க்​கட்சி எம்​.பி.க்​களை நேரடி​யாகவோ அல்லது மறை​முக​மாகவோ தன் வசத்​துக்கு பாஜக இழுத்து வருகிறது. டெல்​லி​யில் ஆம் ஆத்மி எம்​.பி.க்​கள், மேற்கு வங்​கத்​தில் மம்தாவின் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி.க்​கள் ஆகியோர் தத்​தமது கட்​சிகளை உடைத்து பாஜக​வுக்​குத் தாவி​யுள்​ளனர். இதில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி எம்​.பி.க்​கள், இந்​திய குடிமக்கள் கட்​சி​யில் இணைந்து பாஜக​வுக்கு ஆதரவு அளித்து வருகின்​றனர்.

தற்​போது அதே பாணி​யில் மகா​ராஷ்டி​ரா​வில் சிவசே​னா​வின் பெரும்​பான்மை எம்​.பி.க்​களை இழுத்​துள்ள நிலை​யில் அடுத்து சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸுக்கு பாஜக இலக்கு வைத்​துள்​ள​தாகத் தெரி​கிறது. இதனால், சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ், மறைந்த அஜித் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் கட்​சிகளில் சலசலப்பு ஏற்​பட்​டுள்​ளது. அஜித் பவார் இறந்த பின்​னர், அவரது மனைவி சுனேத்ரா பவார் துணை முதல்​வ​ராக பதவி​யேற்​றுள்​ளார்.

இந்​நிலை​யில் ​தான் தனது எதிரணி​யில் இருந்து எம்​பி.க்​களை லாவக​மாக இழுத்​துள்ள ஏக்​நாத் ஷிண்​டேவை தேசி​ய​வாத காங்கிரஸ் தலை​வர் சரத் பவார் நேரில் சென்று சந்​தித்​துப் பேசினார். ஏக்​நாத் ஷிண்​டே​வின் அலு​வல​க​மான விதான் பவனில் இரு​வரின் சந்​திப்பு நிகழ்ந்​துள்​ளது. இரு​வரும் 45 நிமிடங்​கள் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இந்த சந்​திப்பு காரண​மாக, சரத் பவார் தலை​மையி​லான அணி​யும் பாஜக கூட்​டணி வசம் செல்​லக்​கூடும் என்ற ஊகங்​கள் எழுந்​துள்​ளன.

இது தொடர்​பாக சரத் பவார் தலை​மையி​லான கட்சி இதற்கு மறுக்​கவோ, ஒப்​புக்​கொள்​ளவோ இல்​லை. இதனால் மகா​ராஷ்டிர மாநில அரசி​யலில் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.மேலும் இதனால் பவார் கூட்​ட​ணி​யிலுள்ள சிவசே​னா(உத்​தவ்), காங்​கிரஸ் கட்​சிகளும் கலக்​கத்​தில் உள்​ளன.

இது குறித்து சிவசேனா (உத்​தவ்) எம்​.பி.சஞ்​சய் ராவத் கூறும்போது, “பவார்​-ஷிண்டே சந்​திப்​பால் பல ஊகங்​கள் எழுந்துள்​ளன. மேலும் இது பவார் கட்சி மீது வைத்​துள்ள நம்​பகத்​தன்மை குறித்து கேள்வி எழுந்​துள்​ளது. கட்​சித் தலை​வர்​ மீது வைத்துள்ள நம்பிக்கையை கீழே இறக்கியுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT