மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே
மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
இதுதொடர்பாக அந்த அதிகாரி கூறுகையில், “கடந்த சில நாட்களாக சளி மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஷிண்டே அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். ஷிண்டே வெகு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.