திரிணமூல் காங். கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மற்றொரு அதிர்ச்சி

திரிணமூல் காங். கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மற்றொரு அதிர்ச்சி
Updated on
1 min read

கொல்கத்தா: திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மேற்கு வங்க தலை​வ​ராக இருந்த சந்​திரிமா பட்​டாச்​சார்​யா, நேற்று தனது பதவியை ராஜி​னாமா செய்து எதிரணி​யுடன் சேர்ந்​தார். இது மம்தா பானர்​ஜிக்கு மேலும் ஒரு அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

மேற்கு வங்க முதல்​வ​ராக மம்தா இருந்த போது அவரது அமைச்​சர​வை​யில் இடம் பெற்​றவர் சந்​திரிமா பட்​டாச்​சார்​யா. மம்தாவுக்கு மிக​வும் நெருக்​க​மானவ​ராக இருந்​தார். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்விக்​குப் பின் திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி நிலை குலை​யத் தொடங்​கியது. திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மேற்கு வங்க தலை​வ​ராக இருந்த சுப்​ரதா பக்‌ஷிக்கு பதில் சந்​திரிமா பாட்​டாச்​சார்​யா​வைக் கட்​சி​யின் மாநில தலை​வ​ராக கடந்த மாதம் மம்தா நியமித்​தார்.

இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் போர்க்​கொடி தூக்​கிய பெரும்​பான்மை எம்​எல்​ஏக்​கள், ரிதப்​ரதா பானர்ஜி தலை​மை​யில் தனி அணி​யாக உரு​வாகி எதிர்க்​கட்சி தலை​வர் அந்​தஸ்தை பெற்​றனர்.

திரிண​மூல் எம்.பி.க்​கள் 20 பேர் கட்​சி​யில் இருந்து பிரிந்து ஏசிபிஐ என்ற சிறு கட்​சி​யுடன் இணைந்து பாஜக தலை​மையி​லான தே.ஜ.கூட்​டணிக்கு ஆதரவு தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் மாநில தலை​வர் பதவி உட்பட அனைத்து பொறுப்​பு​களில் இருந்​தும் சந்​திரிமா பட்​டாச்​சார்யா நேற்று ராஜி​னாமா செய்​தார். அதன்​பின் அவர் மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வை​யில் எதிர்க்​கட்சி தலை​வர் ரிதப்​ரதா பானர்​ஜியைச் சந்​தித்​தார். இது மம்தா பானர்​ஜிக்கு அதிர்ச்​சியை அளித்​துள்​ளது. முக்​கிய துறை​களில் அமைச்​ச​ராக இருந்த போது, சந்​திரிமா பட்​டாச்​சார்யா ஏன் பதவியை ராஜி​னாமா செய்​ய​வில்லை என்று மம்​தா​வின் ஆதர​வாளர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர்.

கட்சி அலு​வல​கத்​துக்கு போட்டி

திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யின் அலு​வல​க​மான திரிண​மூல் பவன் கொல்​கத்​தா​வில் உள்​ளது. பெரும்​பான்மை எம்​எல்​ஏ.க்​கள் பிரிந்து தனி அணி​யாக உரு​வான​தால் அவர்​கள் தாங்​கள்​தான் உண்​மை​யான திரிண​மூல் காங்​கிரஸ் என கூறி திரிண​மூல் பவன் அலு​வல​கத்தை கைப்​பற்றி பூட்​டு​களை மாற்​றினர். இதுகுறித்து மம்தா ஆதர​வாளர்​கள் போலீ​ஸில் புகார் அளித்​த​தால் திரிண​மூல் பவனில்​ போலீஸ்​ பாது​காப்​பு பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

கொன்றால் தடுக்கலாம்

தனக்கு எதிராக போர்க் கொடி தூக்கியவர்களை துரோகிகள் என கூறியுள்ள மம்தா, ‘‘திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சின்னம் எனது விசுவாசிகள் இருக்கும் அணியிடம்தான் இருக்கும். என்னை தடுக்க வேண்டும் என்றால் நீங்கள் என்னை கொல்ல வேண்டும்” என சவால் விடுத்துள்ளார். இதனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோர எதிரணி நீண்ட சட்ட போராட்டத்தை எதிர்கொள்ள நேரிடும்.

திரிணமூல் காங். கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா: மம்தா பானர்ஜிக்கு மற்றொரு அதிர்ச்சி
இடைவிடாத மழையால் மும்பையில் 5 பேர் உயிரிழப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in