இந்தியா

அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் மோதி 8 யானைகள் உயிரிழப்பு: 5 பெட்​டிகள் தடம்​ புரண்​டதால் ரயில் சேவை பாதிப்பு

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: அ​சாமில் யானைக் கூட்​டம் மீது ராஜ்​தானி எக்​ஸ்​பிரஸ் மோதி​ய​தில் 8 யானை​கள் உயி​ரிழந்​தன. இதனால் 5 பெட்​டிகள் தடம்​புரண்​டன.

மிசோரம் தலைநகர் ஐஸ்​வால் அரு​கில் உள்ள சாய்​ராங்​-கில் இருந்து டெல்லி ஆனந்த்​விஹாருக்கு ராஜ்​தானி எக்​ஸ்​பிரஸ் வெள்​ளிக்​கிழமை இரவு புறப்​பட்​டது. இது நேற்று அதி​காலை அசாமின் ஹோஜாய் மாவட்​டம், சாங்​ஜு​ராய் என்ற கிராமத்​தில், தண்​ட​வாளத்தை கடக்க முயன்ற யானைக் கூட்​டம் மீது மோதி​யது. இதில் 8 யானை​கள் உயி​ரிழந்​தன.

இதுகுறித்து வடகிழக்கு எல்லை ரயில்​வே​யின் தலைமை மக்​கள் தொடர்பு அதி​காரி கபிஞ்​சல் கிஷோர் கூறுகை​யில், “கு​வாஹாட்​டி​யில் இருந்து 125 கி.மீ. தொலை​வில், யானை​கள் கடந்து செல்​லும் பகு​தி​யாக அறிவிக்​கப்​ப​டாத இடத்​தில் இந்த விபத்து நடந்​துள்​ளது. சுமார் 100 யானை​கள் தண்​ட​வாளத்தை கடப்​பதை கண்ட லோகோ பைலட் (இன்​ஜின் டிரைவர்) எமர்​ஜென்சி பிரேக் மூலம் ரயிலை நிறுத்​தி​னார். எனினும் சில யானை​கள் மீது ரயில் மோதி​விட்​டது. இந்த விபத்​தில் 5 பெட்​டிகள் தடம்​புரண்​டன. எனினும் பயணி​கள் காயம் அடைய​வில்​லை. தடம்​புரண்ட பெட்​டிகளில் இருந்த 200 பயணி​கள் மற்ற பெட்​டிகளுக்கு மாற்​றப்​பட்​டு, ரயில் தனது பயணத்தை தொடர்ந்​தது. குவாஹாட்​டி​யில் ரயி​லில் கூடு​தல் பெட்​டிகள் சேர்க்​கப்​பட்​டன. சம்பவ இடத்​தில் மீட்​புப் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன’’ என்​றார்.

விபத்து குறித்து அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறுகை​யில், “மிகுந்த வருத்​தமளிக்​கும் இந்த விபத்து குறித்து விரி​வான விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளேன். வனவிலங்கு வழித்​தடங்​களில் அவற்​றின் பாது​காப்பை மேலும் உறு​திப்​படுத்த தேவை​யான நடவடிக்​கைகளை எடுக்​கு​மாறு வனத்​துறைக்கு உத்​தர​விட்​டுள்​ளேன்’’ என்​றார்.

இந்த விபத்தை தொடர்ந்து அவ்​வழியே செல்​லும் 9 ரயில்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. 13 ரயில்​கள் தாமதம் அடைந்​தன. மேலும் 2 ரயில்​கள் பாதி​யிலேயே நிறுத்​தப்​பட்​டன. கன்​னி​யாகுமரி விவேக் எக்​ஸ்​பிரஸ் பயண நேரம் மாற்றி அமைக்​கப்​பட்​டது. கடந்த மாதம், மேற்கு வங்​கத்​தின் ஜல்​பைகுரி மாவட்​டத்​தில் ரயில் மோதி​ய​தில் ஒரு யானை உயி​ரிழந்​தது. மேலும் ஒரு யானைக் குட்டி காயம் அடைந்​தது.

SCROLL FOR NEXT